அணுகல்தன்மை மையம்

படைப்பாற்றல், அணுகல்தன்மை, உத்வேகம் ஆகியவற்றை அனைவரும் பெறுவதற்கான இடம்.

  • அணுகல்தன்மை அறிக்கை
  • Spotifyயின் உறுதிப்பாடு
  • அணுகல்தன்மை தொடர்பான கருத்து

அணுகல்தன்மை அறிக்கை

Spotifyயில் நாங்கள் மனிதப் படைப்பாற்றலைக் கொண்டாடுவதுடன், எங்கள் தளத்தை அனைவரும் (லட்சக்கணக்கான கலைஞர்கள் மற்றும் கோடிக்கணக்கான கேட்பவர்கள் உட்பட) பயன்படுத்தும் வகையில் வைத்திருக்கக் கடினமாகப் பணியாற்றி வருகிறோம். நிபணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுதல், அணுகல்தன்மை அம்சம் தொடர்பான அனுபவமுள்ளவர்களைப் பணியமர்த்துதல் ஆகியவற்றின் மூலம் எங்கள் தயாரிப்புகளுடனான பங்கேற்பு ஒவ்வொன்றும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்குமாறு மாற்ற பணியாற்றி வருகிறோம். ஒட்டுமொத்தமாக, உருவாக்குவதற்கும், கண்டுபிடிப்பதற்கும், உத்வேகமாக இருப்பதற்குமாக அனைவருக்கும் உதவுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.

அணுகல்தன்மை தொடர்பான கருத்து

கணக்கு அணுகல், பேமெண்ட்டுகள், தொழில்நுட்பச் சிக்கல்கள் போன்றவை தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் எங்களின் ஆதரவுத் தளத்திற்குச் செல்லவும் அல்லது வாடிக்கையாளர் உதவிச் சேவையைத் தொடர்புகொள்ளவும்.

பின்வருபவற்றுள் எதிலேனும் சிக்கல்களை எதிர்கொள்ளும் நபர்களிடம் இருந்து அணுகல்தன்மை தொடர்பான கருத்தைப் பெறுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்:

  • உள்ளடக்க அணுகல்தன்மை, உதாரணமாக, “பாடல்களுக்கு என்னால் பாடல் வரிகளைக் கண்டறிய முடியவில்லை” அல்லது “பாட்காஸ்ட் டிரான்ஸ்கிரிப்ட்டுகளை அணுகுவதில் சிக்கலை எதிர்கொள்கிறேன்”
  • டிஜிட்டல் அணுகல்தன்மை, உதாரணமாக, “உதவித் தொழில்நுட்பத்தை என்னால் வலைதளத்திலோ செயலியிலோ பயன்படுத்த முடியவில்லை”