Spotify பயன்பாட்டு விதிமுறைகள்
2. நாங்கள் வழங்கும் Spotify சேவை.
3. நீங்கள் Spotify சேவையைப் பயன்படுத்துதல்
4. உள்ளடக்கம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உரிமைகள்
5. வாடிக்கையாளர் ஆதரவு, தகவல்கள், கேள்விகள் மற்றும் புகார்கள்
6. சிக்கல்கள் மற்றும் தகராறுகள்
1. அறிமுகம்
இந்த விதிமுறைகளுடன் தொடர்புடைய அல்லது இணைப்புள்ள எங்கள் அனைத்து வலைத்தளங்கள் மற்றும் மென்பொருள் செயலிகள் (ஒட்டுமொத்தமாக, "Spotify சேவை") மற்றும் எந்தவொரு இசை, வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் அல்லது Spotify சேவை மூலம் கிடைக்கக்கூடிய பிற விஷயங்கள் ("உள்ளடக்கம்") உட்பட, இசை ஸ்ட்ரீமிங் மற்றும் பிற உள்ளடக்கத்திற்கான Spotify-இன் தனிப்பயனாக்கிய சேவைகளைப் பயன்படுத்துவதை (அணுகல் கொண்டவை) நிர்வகிக்கும் இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளை (இந்த** "விதிமுறைகள்**") கவனமாகப் படிக்கவும்.
Spotify சேவையின் பயன்பாடு Spotify-ஆல் வழங்கப்படும் கூடுதல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம், அவை இந்த விதிமுறைகளுடன் இந்தக் குறிப்பால் இணைக்கப்படுகின்றன.
Spotify சேவைக்குப் பதிவுசெய்வதன் மூலம் அல்லது பயன்படுத்துவதன் மூலம், இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த விதிமுறைகளுக்கு நீங்கள் உடன்படவில்லை என்றால், Spotify சேவையைப் பயன்படுத்தக்கூடாது அல்லது எந்த உள்ளடக்கத்தையும் அணுகக்கூடாது.
சேவை வழங்குநர்
இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Spotify AB, Regeringsgatan 19, 111 53, Stockholm, Sweden நிறுவனத்திற்கும் இடையில் உள்ளதாகும்.
வயது மற்றும் தகுதித் தேவைகள்
Spotify சேவையைப் பயன்படுத்தவும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் அணுகவும், நீங்கள் (1) 13 வயது (அல்லது உங்கள் சொந்த நாட்டில் இதற்குச் சமமான குறைந்தபட்ச வயது) அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், (2) உங்கள் சொந்த நாட்டின்படி நீங்கள் மைனராக இருந்தால் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒப்புதல் வேண்டும்; (3) எங்களுடன் ஒரு ஒப்பந்த ஒப்பந்தத்தில் நுழைய அதிகாரம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் பொருந்தக்கூடிய எந்தவொரு சட்டத்தின் கீழும் அவ்வாறு செய்யத் தடை இருக்கக்கூடாது, மற்றும் (4) சேவை கிடைக்கும் ஒரு நாட்டில் வசிக்க வேண்டும். Spotify இடம் நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு பதிவுத் தகவல்களும் உண்மையானவை, துல்லியமானவை மற்றும் முழுமையானவை என்று நீங்கள் உறுதியளிப்பது, எல்லா நேரங்களிலும் அதை இவ்வாறே புதுப்பித்த நிலையில் வைத்திருக்கவும் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த நாட்டில் மைனராக இருந்தால், உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உங்கள் சார்பாக இந்த விதிமுறைகளை ஏற்க வேண்டும். பதிவுசெய்தல் செயல்பாட்டில் குறைந்தபட்ச வயதுத் தேவைகள் தொடர்பான கூடுதல் தகவல்களை நீங்கள் காணலாம். குறைந்தபட்ச வயதுத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யாவிட்டால், உங்களை ஒரு பயனராக Spotify-இல் பதிவுசெய்ய இயலாது.
2. நாங்கள் வழங்கும் Spotify சேவை.
Spotify சேவை விருப்பங்கள்
நாங்கள் ஏராளமான Spotify சேவை விருப்பங்களை வழங்குகிறோம். சில Spotify சேவை விருப்பங்கள் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன, மற்ற விருப்பங்களை அணுகுவதற்கு ("கட்டணச் சந்தாக்கள்") முன்பு பேமெண்ட் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்புத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு புரோமோஷனல் திட்டங்கள், மெம்பர்ஷிப்கள் அல்லது சேவைகளையும் நாங்கள் வழங்கலாம். அத்தகைய மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
வரம்பற்ற சேவை எல்லாப் பயனர்களுக்கும் கிடைக்காமல் போகலாம். நீங்கள் சேவைகளுக்குப் பதிவுசெய்யும் போது எந்தச் சேவைகள் உங்களுக்குக் கிடைக்கும் என்பதை விளக்குவோம். வரம்பற்ற சேவைக்கான உங்கள் சந்தாவை நீங்கள் ரத்துசெய்தால், அல்லது வரம்பற்ற சேவைக்கான உங்கள் சந்தாவில் குறுக்கிடப்பட்டால் (எடுத்துக்காட்டாக, உங்கள் பேமெண்ட் விவரங்களை மாற்றினால்), நீங்கள் வரம்பற்ற சேவையை மீண்டும் வாங்க முடியாது. எதிர்காலத்தில் வரம்பற்ற சேவை நிறுத்தப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும், இந்த விஷயத்தில் அதன்பிறகு உங்களிடம் சேவைக்குக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
சோதனைகள்
அவ்வப்போது, நாங்கள் அல்லது எங்கள் சார்பாக மற்றவர்கள், கட்டணச் சந்தாக்களின் சோதனைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பேமெண்ட் கட்டணம் இல்லாமல் அல்லது குறைந்த கட்டணத்தில் ("சோதனை") வழங்கலாம். சோதனை வழியாக Spotify சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், Spotify பிரீமியம் புரோமோஷனல் சலுகை விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
மூன்றாம் தரப்புச் செயலிகள், சாதனங்கள் மற்றும் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்
Spotify சேவையானது மூன்றாம் தரப்புச் செயலிகள், வலைத்தளங்கள் மற்றும் சேவைகள் ("மூன்றாம் தரப்புச் செயலிகள்") மற்றும் மூன்றாம் தரப்புத் தனிநபர் கணினிகள், மொபைல்கள், டேப்லெட்டுகள், கைக்கணி சாதனங்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் பிற சாதனங்களுடன் ("சாதனங்கள்") ஒருங்கிணைக்கப்படலாம் அல்லது பிற வகையில் ஊடாடும் வகையில் அளிக்கப்படலாம். அத்தகைய மூன்றாம் தரப்புச் செயலிகள் மற்றும் சாதனங்களை நீங்கள் பயன்படுத்துவது பொருந்தக்கூடிய மூன்றாம் தரப்பினரால் உங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம். மூன்றாம் தரப்புச் செயலிகள் மற்றும் சாதனங்கள் Spotify சேவையுடன் இணக்கமாக இருக்கும் என்று Spotify உத்தரவாதம் அளிக்காது.
சேவை வரம்புகள் மற்றும் மாற்றங்கள்
Spotify சேவையை இயக்குவதற்கும், தனிப்பயனாக்கிய, இம்மர்சிவ் ஆடியோ அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதற்கும் நாங்கள் நியாயமான கவனிப்பையும் திறமையையும் பயன்படுத்துகிறோம். இருப்பினும், எங்கள் சேவை வழங்கல்களும் அவற்றின் கிடைக்கும் தன்மையும் அவ்வப்போது, பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு உட்பட்டு, உங்களுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு இல்லாமல் மாறக்கூடும்; உதாரணத்திற்கு:
- தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பச் சிக்கல்கள், பராமரிப்பு அல்லது சோதனை அல்லது புதுப்பிப்புகள் காரணமாக Spotify சேவைகள் தற்காலிகக் குறுக்கீடுகளைச் சந்திக்கக்கூடும்.
- எங்கள் சேவைகளைத் தொடர்ந்து முன்னேற்றுவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம், மேலும் Spotify சேவையின் அனைத்துப் பகுதிகளையும் (குறிப்பிட்ட செயல்பாடுகள், அம்சங்கள், சந்தா திட்டங்கள் மற்றும் புரோமோஷனல் சலுகைகள் உட்பட) வழங்குவதை நாங்கள் (நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக) மாற்றியமைக்கலாம், நிறுத்தி வைக்கலாம் அல்லது நிறுத்தலாம்.
- Spotify சேவையின் மூலம் எந்தவொரு குறிப்பிட்ட உள்ளடக்கத்தையும் வழங்க வேண்டிய கடமை Spotify-க்கு இல்லை, மேலும் Spotify அல்லது பொருந்தக்கூடிய உரிமையாளர்கள் குறிப்பிட்ட பாடல்கள், வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் பிற உள்ளடக்கத்தை முன்னறிவிப்பின்றி அகற்றலாம்.
ப்ரீபெய்டு காலத்தின் முடிவிற்கு முன்னர் Spotify நிறுத்திய கட்டணச் சந்தாவிற்காக Spotify இடம் நேரடியாக ப்ரீபெய்டு முறையில் கட்டணம் செலுத்தியிருந்தால் இருந்தால் (அந்தக் காலஅளவு கீழே உள்ள பேமெண்ட்கள் மற்றும் ரத்துசெய்தல் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளதால்), Spotify உங்களுக்கு நீங்கள் ப்ரீபெய்டு செய்துள்ள கட்டணங்களை அத்தகைய சேவை துண்டிப்பிற்குப் பிறகு கட்டணச் சந்தாவில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் காலத்தின் அளவிற்குத் திருப்பித் தரும். உங்களுக்கு ரீஃபண்ட் வழங்குவதற்காக, உங்கள் கணக்கு மற்றும் பில்லிங் தகவல்கள் புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டும்.
அரசாங்க அதிகாரிகள், பிற மூன்றாம் தரப்பினர் அல்லது எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் செயல்களால் ஏற்படும் இணையம் அல்லது பிற சேவைச் செயலிழப்புகள் அல்லது தோல்விகள் தொடர்பாக உங்களுக்குப் பதிலளிக்க வேண்டிய எந்தப் பொறுப்பும் Spotify-க்கு இல்லை, உங்களுக்கு ரீஃபண்ட் வழங்குவதற்கான கடமையும் அதற்கு இல்லை.
3. நீங்கள் Spotify சேவையைப் பயன்படுத்துதல்
Spotify கணக்கை உருவாக்குதல்
Spotify சேவையின் அனைத்தையும் அல்லது அதன் பகுதியைப் பயன்படுத்த, நீங்கள் ஒரு Spotify கணக்கை உருவாக்க வேண்டியிருக்கலாம். உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமேயாகும், அவை ரகசியமாக வைக்கப்பட வேண்டும். உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லின் அனைத்து உபயோகங்களுக்கும் (எந்த அங்கீகரிக்கப்படாத உபயோகம் உட்பட) நீங்கள்தான் பொறுப்பு என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் பயனர்பெயர் அல்லது கடவுச்சொல் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் அல்லது உங்கள் கணக்கில் அங்கீகரிக்கப்படாத அணுகல் இருப்பதாக நீங்கள் நம்பினால் உடனடியாக எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழுவிடம் தெரிவிக்கவும்.
Spotify எந்த காரணத்திற்காகவும் உங்கள் பயனர்பெயரை மீட்டெடுக்கலாம் அல்லது மாற்றுமாறு கோரலாம்.
Spotify சேவையைப் பயன்படுத்துவதற்கான உங்கள் உரிமைகள்
Spotify சேவைகளுக்கான அணுகல்
இந்த விதிமுறைகளுடனான உங்கள் இணக்கத்திற்கு (வேறு பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உட்பட) உட்பட்டு, Spotify சேவை மற்றும் உள்ளடக்கத்தின் தனிப்பட்ட, வணிகரீதியான பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்கான வரையறுக்கப்பட்ட, பிரத்தியேகமற்ற, திரும்பப்பெறக்கூடிய அனுமதியை (ஒட்டுமொத்தமாக, "அணுகல்" ) நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் நிறுத்தும் வரை அல்லது Spotify-ஆல் நிறுத்தப்படும் வரை இந்த அணுகல் நடைமுறையில் இருக்கும். Spotify சேவை அல்லது உள்ளடக்கத்தை மறுபகிர்வு செய்யவோ பரிமாற்றவோ செய்யமாட்டீர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
Spotify மென்பொருள் செயலிகள் மற்றும் உள்ளடக்கத்திற்கு உரிமம் மட்டுமே அளிக்கப்படுகிறது, விற்கப்படவில்லை அல்லது உங்களுக்குப் பரிமாற்றப்படவில்லை, உங்கள் சாதனங்களில் நிறுவிய பின்னரும் கூட Spotify மென்பொருள் செயலிகள் மற்றும் உள்ளடக்கத்தின் அனைத்து நகல்களின் உரிமையையும் Spotify மற்றும் அதன் உரிமதாரர்கள் கொண்டுள்ளனர்.
Spotify-இன் தனியுடைமை உரிமைகள்
Spotify சேவை மற்றும் உள்ளடக்கமானது Spotify அல்லது Spotify-இன் உரிமதாரர்களின் சொத்தாகும். அனைத்து Spotify வர்த்தக முத்திரைகள், சேவை அடையாளங்கள், வர்த்தகப் பெயர்கள், லோகோக்கள், டொமைன் பெயர்கள் மற்றும் Spotify பிராண்டின் ("Spotify பிராண்ட் அம்சங்கள்") வேறு எந்த அம்சங்களும் Spotify அல்லது அதன் உரிமதாரர்களுக்கு மட்டுமே உரிய சொத்தாகும். இந்த விதிமுறைகள் வணிகரீதியான அல்லது வணிகரீதியார்ர பயன்பாட்டிற்காக எந்த Spotify பிராண்ட் அம்சங்களையும் பயன்படுத்த உங்களுக்கு எந்த உரிமையும் வழங்கவில்லை.
Spotify பயனர் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதையும், இந்த விதிமுறைகளால் வெளிப்படையாக அனுமதிக்கப்படாத எந்த வகையிலும் Spotify சேவை, உள்ளடக்கம் அல்லது அதன் எந்தப் பகுதியையும் பயன்படுத்தமாட்டீர்கள் என்றும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
பேமெண்ட்கள் மற்றும் ரத்துசெய்தல்
பில்லிங்
நீங்கள் கட்டணச் சந்தாவை Spotify இடமிருந்து நேரடியாகவோ மூன்றாம் தரப்பு மூலமாகவோ வாங்கலாம்:
● சந்தா கட்டணத்தை ஒரு மாத அடிப்படையில் முன்கூட்டியே செலுத்தலாம் அல்லது நீங்கள் வாங்குவதற்கு முன்பு உங்களுக்குச் சொல்லப்பட்ட வேறு சில தொடர் இடைவெளிகளில் செலுத்தலாம்; அல்லது
● முன்கூட்டியே பணம் செலுத்துதல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ("ப்ரீபெய்டு காலம்") Spotify சேவைக்கு அணுகலை வழங்குகிறது.
வரி விகிதங்கள் நீங்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் உங்கள் மாதாந்திர கட்டணத்தின் போது பொருந்தக்கூடிய வீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.
மூன்றாம் தரப்பினரின் மூலம் கட்டணச் சந்தாவிற்கான அணுகலை நீங்கள் வாங்கினால், இந்த விதிமுறைகளுடன் கூடுதலாக Spotify சேவையைப் பயன்படுத்துவதற்கு அதுபோன்ற மூன்றாம் தரப்பினரின் தனி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தக்கூடும். கட்டணச் சந்தாவை அணுகுவதற்காக Spotify சார்பாக அல்லது அது வழங்கிய குறியீடு, பரிசு அட்டை, ப்ரீபெய்டு சலுகை அல்லது பிற சலுகையைப் பயன்படுத்தி ("குறியீடுகள்") கட்டணச் சந்தாவை நீங்கள் வாங்கினால், நீங்கள் இதன் மூலம் Spotify அட்டை விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
விலை மற்றும் வரி மாற்றங்கள்
தொடர் சந்தா கட்டணங்கள், ப்ரீபெய்டு காலம் (இதுவரை செலுத்தப்படாத காலங்களுக்கு) அல்லது குறியீடுகள் (மேலே வரையறுக்கப்பட்டது) உள்ளிட்ட கட்டணச் சந்தாக்களுக்கான விலையை அவ்வப்போது Spotify மாற்றலாம், மேலும் எந்தவொரு விலை மாற்றங்களையும் நியாயமான அறிவிப்பு மூலம் முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்கும். விலை மாற்றங்கள் விலை மாறிய தேதியைத் தொடர்ந்து அடுத்த சந்தா காலத்தின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும். பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு, விலை மாற்றம் நடைமுறைக்கு வந்தபின் தொடர்ந்து Spotify சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் புதிய விலையை ஏற்றுக்கொள்வதாகக் கருதப்படும். விலை மாற்றத்திற்கு நீங்கள் உடன்படவில்லை என்றால், விலை மாற்றம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பொருந்தக்கூடிய கட்டணச் சந்தாவிலிருந்து விலகுவதன் மூலம் மாற்றத்தை நிராகரிக்கலாம்.
வரி விகிதங்கள் உங்கள் மாதாந்திரக் கட்டணத்தின் போது பொருந்தும் விகிதங்களின் அடிப்படையில் அமைகின்றன. இந்தத் தொகைகள் உங்கள் நாடு, மாநிலம், பிரதேசம் அல்லது நகரத்தில் உள்ள உள்ளூர் வரித் தேவைகளுக்கு இணங்க காலப்போக்கில் மாறக்கூடும். வரி விகிதத்தில் மேற்கொள்ளப்படும் எந்த மாற்றமும் நீங்கள் வழங்கும் கணக்குத் தகவல்களின் அடிப்படையில் தானாகவே பயன்படுத்தப்படும்
புதுப்பித்தல் மற்றும் ரத்துசெய்தல்
ப்ரீபெய்டு காலத்திற்கான கட்டணச் சந்தாக்களைத் தவிர, Spotify-க்கான உங்கள் பேமெண்ட் அல்லது நீங்கள் கட்டணச் சந்தாவை வாங்கிய மூன்றாம் தரப்பினருக்குப் பொருந்தக்கூடிய சந்தா காலத்தின் முடிவில் அந்தச் சந்தா தானாகவே புதுப்பிக்கப்படும், அதாவது உங்கள் கட்டணச் சந்தாவை நீங்கள் ரத்து செய்யாவிட்டால் தற்போதைய சந்தா காலத்தின் முடிவில். ரத்துசெய்வது குறித்த வழிமுறைகளுக்குஇங்கே எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழுவைத் தொடர்பு கொள்ளவும். ரத்துசெய்தலானது தற்போதைய சந்தா காலத்தின் கடைசி நாளுக்கு அடுத்த நாள் முதல் நடைமுறைக்கு வரும், நீங்கள் Spotify சேவையின் இலவச பதிப்பிற்குத் தரமிறக்கப்படுவீர்கள். இந்த விதிமுறைகளில் வெளிப்படையாகக் கூறப்பட்டதைத் தவிர, எந்தவொரு பகுதிச் சந்தா காலங்களுக்கும் நாங்கள் ரீஃபண்ட்களைத் தருவதில்லை அல்லது கிரெடிட்களை வழங்க மாட்டோம்.
நீங்கள் ஒரு குறியீட்டைப் பயன்படுத்தி கட்டணச் சந்தாவை வாங்கியிருந்தால், குறியீட்டில் கூறப்பட்ட காலத்தின் முடிவில் அல்லது Spotify சேவைக்குச் செலுத்தும் அளவிற்கு ப்ரீபெய்டு பேலன்ஸ் இல்லாத போது உங்கள் சந்தா தானாகவே நிறுத்தப்படும்.
திரும்பப்பெறும் உரிமை
நீங்கள் ஒரு சோதனைக்குப் பதிவுசெய்தால், சோதனையைப் பெறும் கட்டணச் சந்தாவிற்கான திரும்பப் பெறும் உரிமையானது நீங்கள் சோதனையைத் தொடங்கிய பதினான்கு (14) நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். சோதனை முடிவடைவதற்கு முன்னர் நீங்கள் கட்டணச் சந்தாவை ரத்து செய்யாவிட்டால், நீங்கள் திரும்பப் பெறுவதற்கான உரிமையை இழக்கிறீர்கள், கட்டணச் சந்தாவை ரத்துசெய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ஏற்றுக்கொண்ட கட்டணத்தைத் தானாகவே வசூலிக்க Spotify-ஐ அங்கீகரிக்கிறீர்கள். பதினான்கு (14) நாட்களுக்குக் குறைவான சோதனைகளுக்கு, உங்கள் சோதனை முடிந்த உடனேயே கட்டணச் சேவையை உங்களுக்கு வழங்குவதை நீங்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறீர்கள், அதிலிருந்து நீங்கள் திரும்பப் பெறுவதற்கான உரிமையை இழக்கிறீர்கள்.
எந்தவொரு சோதனையும் இல்லாமல் நீங்கள் கட்டணச் சந்தாவை வாங்கினால், எந்தவொரு காரணத்திற்காகவும் நீங்கள் வாங்கிய பிறகு பதினான்கு (14) நாட்கள் வரை அதைத் திரும்பப் பெறலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள், உங்கள் எண்ணத்தை மாற்றியதை எங்களிடம் சொல்லும் வரை வழங்கப்படும் சேவைகளுக்கு நீங்கள் எங்களுக்குப் பணம் செலுத்த வேண்டும். . நீங்கள் வாங்கியதைத் தொடர்ந்து உடனடியாக உங்களுக்குச் சேவையை வழங்குவதற்கும், திரும்பப் பெறுவதற்கான உரிமையை நீங்கள் இழக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் ரத்துசெய்யும் வரை ஒவ்வொரு மாதமும் தானாகவே கட்டணம் வசூலிக்க Spotify-ஐ அங்கீகரிப்பதையும் நீங்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறீர்கள்.
பயனர் வழிகாட்டுதல்கள்
Spotify சேவை அனைவருக்கும் சுவாரஸ்யமாக இருப்பதை உறுதிசெய்ய, Spotify சேவையைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை ("Spotify பயனர் வழிகாட்டுதல்கள்") ஏற்படுத்தியுள்ளோம். Spotify சேவையைப் பயன்படுத்துவதில், நீங்கள் Spotify பயனர் வழிகாட்டுதல்களுக்கும், பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கும் இணங்க வேண்டும், மேலும் மூன்றாம் தரப்பினரின் அறிவுசார் சொத்து, தனியுரிமை மற்றும் பிற உரிமைகளையும் மதிக்க வேண்டும்.
பிராண்ட் கணக்குகள்
ஒரு நிறுவனம், அமைப்பு, உறுப்பு நிறுவனம் அல்லது பிராண்ட் (ஒரு "பிராண்ட்" மற்றும் அத்தகைய கணக்கு "பிராண்ட் கணக்கு") சார்பாக நீங்கள் ஒரு Spotify கணக்கை ஏற்படுத்தினால், இந்த விதிமுறைகள் முழுவதும் பயன்படுத்தப்படும் "நீங்கள்" மற்றும் "உங்கள்" என்ற சொற்கள் (இங்கே குறிப்பால் இணைக்கப்பட்ட பிற Spotify விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உட்பட), உங்களுக்கும் பிராண்டுக்கும் பொருந்தும்.
நீங்கள் ஒரு பிராண்ட் கணக்கை உருவாக்கினால், இந்த விதிமுறைகளில் (பிற பொருந்தக்கூடிய Spotify விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உட்பட) வழங்கப்பட்டுள்ள அனைத்து அனுமதிகளையும் உரிமங்களையும் வழங்கவும், இந்த விதிமுறைகளுக்கு பிராண்ட் இணங்குவதை உறுதிசெய்யவும் உங்களுக்கு அதிகாரம் உள்ளது என்பதை உறுதி கூறி, உத்தரவாதமளிக்கிறீர்கள்.
ஒரு பிராண்டானது பயனர்களைப் பின்தொடரலாம் மற்றும் பிளேலிஸ்ட்களை உருவாக்கலாம் மற்றும் பகிரலாம், தொடர்புடையவர்களிடம் தேவையான ஒப்புதலை பிராண்ட் சுயாதீனமாகப் பெறாவிட்டால் தவிர, பிராண்டுக்கும் அதைப் பின்தொடரும் பயனர், கலைஞர், பாடலாசிரியர் அல்லது வேறு எந்த நபருக்கும் இடையிலான ஒப்புதல் அல்லது வணிக உறவைக் குறிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் பிராண்ட் எடுக்கக்கூடாது. கூடுதலாக, கலைஞர்கள், பாடலாசிரியர்கள், பயனர்கள் அல்லது வேறு எந்தத் தரப்பினருக்கும் வழங்கப்படும் எந்தவொரு ஒப்புதல்களையும் அல்லது கருத்தாக்கத்தையும் வெளியிடுவது குறித்து பிராண்டுகள் எங்கள் பயனர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும், மேலும் மேற்கூறிய நடைமுறைகளில் ஈடுபடும்போது பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் நடைமுறைச் சட்டங்களுக்கு இணங்க வேண்டும்.
ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் தடைகள்
Spotify-இன் தயாரிப்புகள் U.S. ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அல்லது U.S. வர்த்தகத் துறையால் பராமரிக்கப்படும் ஏற்றுமதி நிர்வாக ஒழுங்குமுறைகள் ("EAR"), வெளிநாட்டுச் சொத்துகள் கட்டுப்பாட்டின் ("OFAC") கருவூலத் துறை அலுவலகத்தால் பராமரிக்கப்படும் வர்த்தக மற்றும் பொருளாதாரத் தடைகள் மற்றும் இராஜாங்கத் துறையால் பராமரிக்கப்படும் சர்வதேச ஆயுத ஒழுங்குமுறைகள் ("ITAR") உள்ளிட்ட பிற நீதி எல்லைகளில் பொருந்தும் ஒத்த சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கலாம். நீங்கள் (1) அமெரிக்கா, பொருட்களைத் தடைசெய்துள்ள அல்லது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள எந்தவொரு நாட்டிலும் நீங்கள் வசிக்கவில்லை என்றும்; மற்றும் (2) பொருந்தக்கூடிய எந்தவொரு ஏற்றுமதி அல்லது மறு ஏற்றுமதி சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகள் அல்லது பிற அதிகார வரம்புகளில் பொருந்தக்கூடிய அல்லது இதே போன்ற சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது மறுக்கப்பட்ட அல்லது எந்தவொரு U.S. அரசாங்கப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ள தடுக்கப்பட்டுள்ள அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ள தரப்பு அல்ல என்றும் உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.
EAR விதித்துள்ளவை மற்றும் OFAC-ஆல் பராமரிக்கப்படும் வர்த்தக மற்றும் பொருளாதாரத் தடைகள் உட்பட, பொருந்தக்கூடிய அனைத்து ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கவும் ஒப்புக்கொள்கிறீர்கள். குறிப்பாக, EAR, OFAC-ஆல் பராமரிக்கப்படும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடைகள் அல்லது அமெரிக்காவின் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகள் அல்லது வேறு எந்த அதிகார வரம்பிலும் அந்த சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி தேவைப்படும் முறையான அரசாங்க அதிகாரிகளிடமிருந்து முன்கூட்டியே அனுமதி பெறாமல் தடைசெய்யப்பட்டுள்ள எந்தவொரு இடத்திற்கும், நிறுவனத்திற்கும் அல்லது நபருக்கும் அல்லது இறுதி உபயோகம் தடைசெய்யப்பட்டுள்ள இடத்திலும் இந்த விதிமுறைகளின் கீழ் Spotify இடமிருந்து பெறப்படும் எந்தவொரு தயாரிப்புகள், மென்பொருள் அல்லது தொழில்நுட்பத்தை (அத்தகைய தொழில்நுட்பத்திலிருந்து பெறப்பட்ட அல்லது அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள் உட்பட) நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுத்தவோ, விற்கவோ, ஏற்றுமதி செய்யவோ, மறு ஏற்றுமதி செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ, திருப்பிவிடவோ, வெளியிடவோ அல்லது அகற்றவோ மாட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.
4. உள்ளடக்கம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உரிமைகள்
பயனர் உள்ளடக்கம்
சேவையில் நீங்கள் இடுகையிடும் உள்ளடக்கம்
Spotify பயனர்கள் Spotify சேவைக்கு ("பயனர் உள்ளடக்கம்") உள்ளடக்கத்தை இடுகையிடலாம், பதிவேற்றலாம் அல்லது பங்களிக்கலாம். சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, பயனர்களால் Spotify சேவையில் (Spotify ஆதரவுச் சமூகங்களில் சேர்ப்பதும் உட்பட) சேர்க்கப்படும், உருவாக்கப்படும், பதிவேற்றப்படும், சமர்ப்பிக்கப்படும், விநியோகிக்கப்படும் அல்லது இடுகையிடப்படும் அனைத்துத் தகவல்களும், பொருட்களும் மற்றும் பிற உள்ளடக்கமும் "பயனர் உள்ளடக்கம்" அடங்கும்.
நீங்கள் இடுகையிடும் அனைத்துப் பயனர் உள்ளடக்கத்திற்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள்.
Spotify-இல் நீங்கள் இடுகையிடும் எந்தவொரு பயனர் உள்ளடக்கத்தையும் பொறுத்து, (1) அத்தகைய பயனர் உள்ளடக்கம் உங்களுக்குச் சொந்தமானது அல்லது இடுகையிட உரிமை உள்ளது என்றும்; அல்லது (2) அத்தகைய பயனர் உள்ளடக்கம் அல்லது அதன் உபயோகமானது கீழே வழங்கப்பட்ட உரிமத்தின்படி Spotify-இல் பயன்படுத்தும் வகையில் உள்ளதை உறுதிசெய்கிறீர்கள், அது இவ்வாறு இருக்கக்கூடாது: (i) இந்த விதிமுறைகள், பொருந்தக்கூடிய சட்டம் அல்லது அறிவுசார் சொத்து அல்லது எந்த மூன்றாம் தரப்பினரின் பிற உரிமைகளையும் மீறக்கூடாது; அல்லது (ii) அத்தகைய பயனர் உள்ளடக்கம் உங்களுக்கோ அல்லது உங்கள் பயனர் உள்ளடக்கத்துக்கோ Spotify அல்லது எந்தவொரு கலைஞர், இசைக்குழு, லேபிள் அல்லது பிற தனிநபர் அல்லது நிறுவனங்களுடனான எந்தவொரு தொடர்பையும் அல்லது ஒப்புதலையும் Spotify அல்லது அத்தகைய தனிநபர் அல்லது நிறுவனத்தின் முன்கூட்டிய வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதியின்றி குறிப்பிடக்கூடாது.
Spotify சேவையில் பயனர் உள்ளடக்கம் அல்லது பிற தகவல்களை இடுகையிடும் அல்லது பகிரும் போது, அந்த உள்ளடக்கம் மற்றும் பிற தகவல்கள் பொதுவில் அணுகக்கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள், Spotify சேவையிலும் இணையத்திலும் மற்றவர்களால் பயன்படுத்தப்படலாம், அவர்களால் மீண்டும் பகிரப்படலாம், எனவே Spotify சேவையில் இடுகையிடும் அல்லது பகிரும் போது எச்சரிக்கையாக இருங்கள், மேலும் உங்கள் கணக்கு அமைப்புகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் அல்லது மற்றவர்கள் Spotify சேவையில் இடுகையிடும் அல்லது பகிரும் விஷயங்களுக்கு Spotify பொறுப்பல்ல.
பயனர் உள்ளடக்கத்தைக் கண்காணித்தல்
Spotify பயனர் உள்ளடக்கத்தைக் கண்காணிக்கலாம் அல்லது மதிப்பாய்வு செய்யலாம், ஆனால் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற எந்தக் கடமையும் அதற்கு இல்லை. எந்தவொரு அல்லது எந்தக் காரணத்திற்காகவும் எந்தவொரு பயனர் உள்ளடக்கத்திற்கான அணுகலையும் அகற்றும் அல்லது முடக்கும் உரிமையை Spotify கொண்டுள்ளது. உங்களுக்கு முன்கூட்டிய அறிவிப்பு வழங்காமல் Spotify இந்த நடவடிக்கைகளை எடுக்கலாம்.
நீங்கள் எங்களுக்கு வழங்கும் உரிமங்கள்
பயனர் உள்ளடக்கம்
உங்கள் பயனர் உள்ளடக்கத்தைச் சேவையில் இடுகையிடும் போது அதன் உரிமையை நீங்கள் கொண்டுள்ளீர்கள். இருப்பினும், உங்கள் பயனர் உள்ளடக்கத்தை Spotify சேவையில் கிடைக்கச் செய்வதற்கு, உங்களிடமிருந்து அந்தப் பயனர் உள்ளடக்கத்திற்கு எங்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட உரிமம் தேவை. அதன்படி, Spotify-க்குப் பிரத்தியேகமற்ற, பரிமாற்றத்தக்க, துணை உரிமம் பெறக்கூடிய, ராயல்டி இல்லாத, முழுமையாகப் பணம் செலுத்திய, திரும்பப் பெறமுடியாத, உலகளாவிய உரிமத்தை மீளுருவாக்கம் செய்ய, கிடைக்குமாறு செய்ய, செய்துகாட்ட மற்றும் காட்சிப்படுத்த, மொழிபெயர்க்க, மாற்றியமைக்க, வழித்தோன்றல் படைப்புகளை உருவாக்க, விநியோகிக்க மற்றும் Spotify சேவையுடன் எந்தவொரு ஊடகம் மூலமாகவும், தனியாகவோ அல்லது பிற உள்ளடக்கம் அல்லது பொருட்களுடன் இணைந்து, எந்த வகையிலும், எந்த வழி, முறை அல்லது தொழில்நுட்பம் மூலம் இப்போது அறியப்பட்டுள்ள அல்லது இனி உருவாக்கப்படுவதைப் பயன்படுத்த அனுமதி அளிக்கிறீர்கள். பொருந்தக்கூடிய மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு, பின்னூட்டம் மற்றும் அத்தகைய பயனர் உள்ளடக்கத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் நடத்துவதை எதிர்ப்பதற்கான உங்கள் உரிமை உட்பட எந்தவொரு பயனர் உள்ளடக்கத்தின் ஆசிரியராக அடையாளம் காணப்படுவதற்கான உங்கள் உரிமை போன்ற எந்தவொரு "தார்மீக உரிமைகள்" அல்லது அதற்குச் சமமான உரிமைகளையும் தள்ளுபடி செய்வதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
பின்னூட்டம்
நீங்கள் Spotify சேவை அல்லது எந்தவொரு உள்ளடக்கத்தையும் பயன்படுத்துவது தொடர்பாக யோசனைகள், பரிந்துரைகள் அல்லது பிற பின்னூட்டத்தை ("பின்னூட்டம்") வழங்கினால், அத்தகைய பின்னூட்டமானது ரகசியமானது அல்ல, அது Spotify-ஆல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மற்றும் உங்களுக்குப் பணம் செலுத்தாமல் பயன்படுத்தப்படலாம். இந்த விதிமுறைகளின் கீழ் வரும் பின்னூட்டமானது ஒரு வகை பயனர் உள்ளடக்கமாகவே கருதப்படுகிறது.
உங்கள் சாதனம்.
நீங்கள் (1) Spotify சேவையின் செயல்பாட்டை வழங்குவதற்காக உங்கள் சாதனத்தில் பிராசசர், அலைவரிசை மற்றும் சேமிப்பக வன்பொருளைப் பயன்படுத்த Spotify சேவையை அனுமதிக்கவும், (2) உங்களுக்கு விளம்பரம் மற்றும் பிற தகவல்களை வழங்கவும், Spotify தனியுரிமைக் கொள்கையின்படி அனுமதிக்கப்பட்ட முறையில் எங்கள் வணிகக் கூட்டாளர்களையும் அவ்வாறு செய்ய அனுமதிக்கவும் எங்களுக்கு உரிமை வழங்கியுள்ளீர்கள்.
உள்ளடக்க அனுபவம்
Spotify சேவையின் எந்தப் பகுதியிலும், நீங்கள் அணுகும் உள்ளடக்கத்தின் தெரிவு மற்றும் இடநிலையானது மூன்றாம் தரப்பினருடனான Spotify-இன் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட வணிக ரீதியான கருத்தாக்கங்களால் பாதிக்கப்படலாம்.
Spotify (எ.கா., பாட்காஸ்ட்கள்)-ஆல் உரிமம் பெற்ற, வழங்கப்படும், உருவாக்கிய அல்லது பிற வகைகளில் கிடைக்குமாறு செய்யப்பட்ட சில உள்ளடக்கத்தில் விளம்பரங்கள் இருக்கலாம், இதுபோன்ற எந்தவொரு விளம்பரத்திற்கும் Spotify பொறுப்பல்ல.
மீறல் கிளைம்கள்
அறிவுசார் சொத்து உரிமையாளர்களின் உரிமைகளுக்கு Spotify மதிப்பளிக்கிறது. எந்தவொரு உள்ளடக்கமும் உங்கள் பதிப்புரிமை உரிமைகளை மீறுவதாக நீங்கள் நம்பினால்,Spotify பதிப்புரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.
5. வாடிக்கையாளர் ஆதரவு, தகவல்கள், கேள்விகள் மற்றும் புகார்கள்
Spotify ஆதரவுச் சமூகம்
Spotify சேவை தொடர்பான தகவல்கள், உதவிக்குறிப்புகள் மற்றும் பிற விஷயங்களின் விவாதங்கள் மற்றும் பரிமாற்றத்திற்கான இடமேSpotify ஆதரவு சமூகமாகும். Spotify ஆதரவுச் சமூகத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள்சமூக விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
வாடிக்கையாளர் ஆதரவு, தகவல்கள், கேள்விகள், புகாரளித்தல்
கணக்கு மற்றும் பேமெண்ட் தொடர்பான கேள்விகள் தொடர்பான ("வாடிக்கையாளர் ஆதரவு வினவல்கள்") வாடிக்கையாளர் ஆதரவுக்காக, எங்கள் வலைத்தளத்தின்எங்களைப் பற்றி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள வாடிக்கையாளர் ஆதரவு ஆதாரங்களைப் பயன்படுத்தவும்.
Spotify சேவை அல்லது இந்த விதிமுறைகள் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் (இங்கு சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் Spotify விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உட்பட), எங்கள் வலைத்தளத்தின் எங்களைப் பற்றி பிரிவுக்குச் செல்வதன் மூலம் Spotify வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும்.
நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிக்கிறீர்கள் என்றால், மாற்றுத் தகராறு தீர்வுக்காக (ODR-தளம்) ஆன்லைன் தளத்திலும் புகார் அளிக்கலாம். பின்வரும் இணைப்பு மூலம் ODR-தளத்தைக் காணலாம்: https://ec.europa.eu/consumers/odr.
6. சிக்கல்கள் மற்றும் தகராறுகள்
Spotify சேவைகளை இடைநிறுத்துதல் மற்றும் நிறுத்துதல்
நீங்கள் நிறுத்தும் அல்லது Spotify-ஆல் நிறுத்தப்படும் வரை இந்த விதிமுறைகள் உங்களுக்குத் தொடர்ந்து பொருந்தும். Spotify, இந்த விதிமுறைகளை (இங்கு சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உட்பட) நிறுத்தலாம் அல்லது இந்த விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் மீறியுள்ளதாக நாங்கள் நம்பினால், எந்த நேரத்திலும் Spotify சேவைக்கான உங்கள் அணுகலை இடைநிறுத்தி வைக்கலாம், நாங்கள் Spotify சேவையை வழங்குவதை நிறுத்தினால் அல்லது மிகவும் முக்கியமான மாற்றம் இருந்தால், உங்களுக்கு நியாயமான அறிவிப்பு வழங்குவோம் அல்லது பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க வேண்டியது அவசியம் என்று நாங்கள் நம்பும் நடவடிக்கையை மேற்கொள்வோம். இந்த விதிமுறைகளை நீங்கள் நிறுத்தினால் அல்லது Spotify நிறுத்தினால் அல்லது Spotify சேவைக்கான உங்கள் அணுகலை Spotify இடைநிறுத்தினால், பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு உட்பட்டு, உங்களுக்குப் பதிலளிக்க வேண்டிய எந்தப் பொறுப்பும் Spotify-க்கு இல்லை மற்றும் (இந்த விதிமுறைகளில் வெளிப்படையாக வழங்கப்பட்டதைத் தவிர) நீங்கள் ஏற்கனவே செலுத்திய எந்தத் தொகையையும் Spotify ரீஃபண்ட் செய்யத் தேவையில்லை. நீங்கள் எந்த நேரத்திலும் இந்த விதிமுறைகளை நிறுத்தலாம், அந்தச் சூழலில் நீங்கள் தொடர்ந்து Spotify சேவையை அணுகவோ பயன்படுத்தவோ கூடாது. உங்கள் Spotify கணக்கை எவ்வாறு நிறுத்துவது என்பதை அறிய, எங்களின்எங்களைப் பற்றி பக்கத்தில் உள்ள வாடிக்கையாளர் ஆதரவு ஆதாரங்களைப் பயன்படுத்தவும்.
இங்குள்ள பிரிவுகள் 4 (உள்ளடக்கம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உரிமைகள்), 3 (நீங்கள் Spotify சேவையைப் பயன்படுத்துதல்), 2 (நாங்கள் வழங்கும் Spotify சேவை), 6 (சிக்கல்கள் மற்றும் தகராறுகள்), 7 (இந்த விதிமுறைகளைப் பற்றி), அத்துடன் வேறு ஏதேனும் இந்த விதிமுறைகளின் பகுதிகள், வெளிப்படையாகவோ அல்லது அவற்றின் இயல்பாகவோ, இந்த விதிமுறைகள் நிறுத்தப்பட்ட பின்னரும் கூட நடைமுறையில் இருக்கும்.
உத்தரவாதப் பொறுப்புத்துறப்புகள்
Spotify ஆனது நியாயமான கவனிப்பு மற்றும் திறனைப் பயன்படுத்தி Spotify சேவையை வழங்கும் மற்றும் Spotify வழங்கிய Spotify சேவையின் எந்தவொரு விவரக்குறிப்பிற்கும் ஏற்ப, இருப்பினும், வெளிப்படையான, மறைமுகமான, அல்லது சட்டரீதியான எந்தவொரு வகைக்கும் உட்பட்டு எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் Spotify சேவை "உள்ளது உள்ளபடியே" மற்றும் "கிடைக்கும் நிலையில்" வழங்கப்படுகிறது. மேலும், Spotify மற்றும் உள்ளடக்கத்தின் அனைத்து உரிமையாளர்களும் திருப்திகரமான தரம், வணிகத்தன்மை, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கும் பொருந்தும் அல்லது மீறல் இல்லாமை உத்தரவாதங்கள் உள்ளிட்ட எந்தவொரு வெளிப்படையான, மறைமுகமான மற்றும் சட்டரீதியான உத்தரவாதங்களையும் பொறுப்புத்துறக்கின்றனர். Spotify சேவை அல்லது உள்ளடக்கத்தில் தீம்பொருள் அல்லது பிற தீங்கு விளைவிக்கும் கூறுகள் இருக்கும் என்று Spotify அல்லது உள்ளடக்க உரிமையாளர் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. கூடுதலாக, எந்த மூன்றாம் தரப்புச் செயலிகள் (அல்லது அதன் உள்ளடக்கம்), பயனர் உள்ளடக்கம், சாதனங்கள் அல்லது மூன்றாம் தரப்பினரால் அல்லது Spotify சேவை அல்லது எந்தவொரு ஹைப்பர்லிங்க் செய்யப்பட்ட வலைத்தளத்தின் மூலமாகவும் விளம்பரப்படுத்தப்படும், புரோமோட் செய்யப்படும் அல்லது வழங்கப்படும் எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவை தொடர்பாகவும் Spotify எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும், உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை அல்லது எந்தவொரு பொறுப்பையும் ஏற்கவில்லை, உங்களுக்கும் மேற்கூறிய எந்தவொரு மூன்றாம் தரப்பு வழங்குநர்களுக்கும் இடையிலான எந்தவொரு பரிவர்த்தனைக்கும் Spotify பொறுப்பல்ல. Spotify இடமிருந்து நீங்கள் பெறும் வாய்வழி அல்லது எழுத்துப்பூர்வமான எந்த ஆலோசனை அல்லது தகவல்களும் Spotify சார்பாக எந்த உத்தரவாதத்தையும் உருவாக்காது. Spotify சேவையைப் பயன்படுத்தும் போது, நீங்கள் பாலியல் ரீதியில் வெளிப்படையான உள்ளடக்க வடிகட்டுதல் அம்சங்களுக்கான அணுகலைக் கொண்டிருக்கலாம், ஆனால் இந்த அம்சங்களைப் பயன்படுத்தினாலும் சில பாலியல் ரீதியில் வெளிப்படையான உள்ளடக்கம் சேவையில் கிடைக்கக்கூடும், அதனால் எல்லா பாலியல் ரீதியில் வெளிப்படையான உள்ளடக்கத்தையும் வடிகட்ட நீங்கள் அத்தகைய அம்சங்களை மட்டுமே சார்த்திருக்கக்கூடாது. பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு இந்தப் பிரிவு பொருந்தும்.
சில அதிகார எல்லைகளில் ஒரு நுகர்வோரின் பொருந்தக்கூடிய சட்டரீதியான உரிமைகள் குறித்த மறைமுகமான உத்தரவாதங்கள் அல்லது வரம்புகளை விலக்குவது அனுமதிக்கப்படுவதில்லை, எனவே இந்தப் பிரிவில் உள்ள விலக்கு மற்றும் வரம்புகள் உங்களுக்குப் பொருந்தாமல் இருக்கலாம் மற்றும் உங்கள் சட்டரீதியான உரிமைகள் எதுவும் பாதிக்கப்படாது.
பொறுப்பின் வரம்பு மற்றும் கிளைமைத் தாக்கல் செய்வதற்கான காலஅளவு
பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு, Spotify சேவையில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அல்லது அதிருப்திக்கு உட்பட்டிருந்தால் உங்கள் ஒரே மற்றும் பிரத்யேகத் தீர்வு எந்த Spotify மென்பொருளையும் நிறுவல் நீக்குவதும், Spotify சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்துவதும் ஆகும். மூன்றாம் தரப்புச் செயலிகளிலிருந்து எழும் அல்லது அதனுடன் தொடர்புடைய அல்லது Spotify சேவையின் மூலம் அல்லது அதனுடனான தொடர்பில் கிடைக்குமாறு செய்யப்பட்ட உள்ளடக்கம் தொடர்பான எந்தவொரு கடமையும் அல்லது பொறுப்பும் Spotify-க்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள், அதே நேரத்தில் அத்தகைய மூன்றாம் தரப்புச் செயலிகளுடனான உங்கள் உறவு தனி ஒப்பந்தங்களால் நிர்வகிக்கப்படலாம் என்பதால் அத்தகைய மூன்றாம் தரப்புச் செயலிகள் அல்லது அதன் உள்ளடக்கத்தில் உள்ள ஏதேனும் சிக்கல்கள் அல்லது அதிருப்திக்கு, அத்தகைய மூன்றாம் தரப்புச் செயலிகளை நிறுவல் நீக்குவது அல்லது நிறுத்துவதே Spotify-ஐப் பொறுத்தவரை உங்கள் ஒரே மற்றும் பிரத்தியேக தீர்வாகும்.
**எந்தவொரு நிகழ்விலும் Spotify, அதன் அதிகாரிகள், பங்குதாரர்கள், பணியாளர்கள், முகவர்கள், இயக்குநர்கள், துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள், வாரிசுகள், நியமிக்கப்படுபவர்கள், சப்ளையர்கள் அல்லது உரிமதாரர்கள் (1) எந்தவொரு மறைமுக, சிறப்பு, தற்செயலான, தண்டனைக்குரிய, முன்மாதிரியான அல்லது தொடர் சேதங்களுக்கும்; (2) Spotify சேவை, சாதனங்கள், மூன்றாம் தரப்புச் செயலிகள் அல்லது மூன்றாம் தரப்புச் செயலி உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல் அல்லது பயன்படுத்த இயலாமை ஆகியவற்றால் எழும் எல்லா நிகழ்வுகளிலும் உபயோகம், தரவு, வணிகம் அல்லது இலாபங்கள் (நேரடி அல்லது மறைமுகமாக இருந்தாலும்) இழப்புக்கும் பொறுப்பேற்கமாட்டார்கள்; அல்லது (3) Spotify சேவை, மூன்றாம் தரப்புச் செயலிகள் அல்லது மூன்றாம் தரப்பு செயலி உள்ளடக்கம் தொடர்பான அனைத்து கிளைம்களுக்கான மொத்தப் பொறுப்பானது (a) முதல் கிளைமிற்கு முந்தைய பன்னிரண்டு மாதங்களில் Spotify நீங்கள் செலுத்திய தொகை; அல்லது (b) $30.00-ஐ விட அதிகமாகக் கூடாது. உங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளுக்கு எங்கள் மீதான எந்தவொரு பொறுப்பும் நியாயமான முறையில் எதிர்பார்க்கக்கூடிய இழப்புகளுக்குக் கண்டிப்பாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. **
தெளிவுபடுத்தலுக்காக, பொருந்தக்கூடிய சட்டத்தின் மூலம் வரையறுக்கப்பட்ட அல்லது விலக்கப்படாத வேறு எந்தப் பொறுப்பிற்கும் பொருந்தக்கூடிய சட்டம் அத்தகைய வரம்பைத் தடைசெய்யும் அளவிற்கு இந்த விதிமுறைகள் மோசடி, மோசடியாகத் தவறாகச் சித்தரித்தல், இறப்பு அல்லது தனிப்பட்ட காயம் ஆகியவற்றுக்கான பொறுப்பை மட்டுப்படுத்தாது.
**பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் அத்தகைய கட்டுப்பாடு தடைசெய்யப்பட்ட இடங்களைத் தவிர, இந்த விதிமுறைகளின் கீழ் எழும் எந்தவொரு கிளைமும் (நடுவர் கோரிக்கையைத் தாக்கல் செய்வதன் மூலம் அல்லது கீழேயுள்ள நடுவர் ஒப்பந்தத்தின் கீழ் ஒரு தனிப்பட்ட நடவடிக்கையைத் தாக்கல் செய்வதன் மூலம்), அந்தத் தரப்பு முதலில் அறிந்த அல்லது நியாயமான முறையில் செயல், விடுபடுதல் அல்லது கிளைம் எழுவதற்கான இயல்புநிலை சூழல் அறிந்த ஒரு (1) வருடத்திற்குள் தொடங்கப்பட வேண்டும்; அந்தக் காலத்திற்குள் வலியுறுத்தப்படாத எந்தவொரு கிளைமிற்கும் தீர்வு காண எந்த உரிமையும் இருக்காது. **
மூன்றாம் தரப்பு உரிமைகள்
உள்ளடக்கத்தின் உரிமையாளர்கள் மற்றும் சில விநியோகஸ்தர்கள் (ஆப் ஸ்டோர் வழங்குநர்கள் போன்றவை) இந்த விதிமுறைகளின் பயனாளிகள் என்பதையும், இந்த விதிமுறைகளை உங்கள் மீது நேரடியாக அமல்படுத்தவும் அவர்களுக்கு உரிமை உள்ளதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Spotify-க்கும் தவிர வேறு யாருக்கும் உரிமைகளை வழங்குவதற்காக அல்ல, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த விதிமுறைகள் எந்தவொரு மூன்றாம் தரப்புப் பயனாளி உரிமைகளையும் உருவாக்காது.
நீங்கள் எங்கள் மொபைல் மென்பொருள் செயலிகளை (ஒவ்வொன்றும், ஒரு "செயலி") Apple Inc. ("Apple") App Store இலிருந்து பதிவிறக்குகிறீர்கள் அல்லது நீங்கள் ஒரு iOS சாதனத்தில் செயலியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் பின்வரும் Apple தொடர்பான அறிவிப்பைப் படித்துவிட்டீர்கள், புரிந்து கொண்டீர்கள் மற்றும் ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Spotify-க்கும் இடையில் உள்ளவையாகும், அதில் Apple ஒரு தரப்பு அல்ல, Spotify சேவைக்கும் அதன் உள்ளடக்கத்திற்கும் Apple பொறுப்பல்ல. Spotify சேவையைப் பொறுத்தவரை எந்தவொரு பராமரிப்பு மற்றும் ஆதரவுச் சேவைகளையும் வழங்க Apple-க்கு எந்தக் கடமையும் இல்லை. எந்தவொரு பொருந்தக்கூடிய உத்தரவாதத்திற்கும் இணங்க Spotify சேவையில் தோல்வி ஏற்பட்டால், Apple நிறுவனத்திடம் நீங்கள் அதைத் தெரிவிக்கலாம் மற்றும் செயலிக்கான பொருந்தக்கூடிய வாங்குதல் விலையை Apple உங்களுக்கு ரீஃபண்ட் அளிக்கும்; மேலும், பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்கு, Spotify சேவையைப் பொறுத்தவரை Apple-க்கு வேறு எந்த உத்தரவாதக் கடமையும் இல்லை. Spotify சேவை தொடர்பாக உங்களிடமிருந்தோ அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ வரும் கிளைம்களுக்குப் பதிலளிக்க வேண்டிய அல்லது Spotify சேவையை நீங்கள் வைத்திருத்தல் அல்லது பயன்படுத்துதல் போன்றவற்றுக்கு Apple பொறுப்பேற்காது, இதில் பின்வருபவை அடங்கும்: (1) தயாரிப்பு பொறுப்பு கிளைம்கள்; (2) பொருந்தக்கூடிய எந்தவொரு சட்ட அல்லது ஒழுங்குமுறை தேவைக்கும் இணங்க Spotify சேவை தவறியது போன்ற எந்தவொரு கிளைம்; (3) நுகர்வோர் பாதுகாப்பு அல்லது இதே போன்ற சட்டத்தின் கீழ் எழும் கிளைம்கள்; மற்றும் (4) அறிவுசார் சொத்து மீறல் தொடர்பான கிளைம். Spotify சேவை அல்லது செயலியை நீங்கள் வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவதால் மூன்றாம் தரப்பினரின் அறிவுசார் சொத்து உரிமைகள் மீறப்படுவதாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு மூன்றாம் தரப்புக் கிளைமின் விசாரணை, பாதுகாப்பு, தீர்வு மற்றும் விடுவிப்புக்கு Apple பொறுப்பல்ல. Spotify சேவையைப் பயன்படுத்தும் போது, பொருந்தக்கூடிய மூன்றாம் தரப்பு விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்க ஒப்புக்கொள்கிறீர்கள். Apple மற்றும் Apple-இன் துணை நிறுவனங்கள் இந்த விதிமுறைகளின் மூன்றாம் தரப்புப் பயனாளிகளாகும், மேலும் இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டவுடன், இந்த விதிமுறைகளின் மூன்றாம் தரப்புப் பயனாளியாக உங்கள் மீது இந்த விதிமுறைகளை அமல்படுத்த Apple நிறுவனத்திற்கு உரிமை (மற்றும் நீங்கள் உரிமையை ஏற்றுக்கொண்டதாக கருதப்படும்) உள்ளது.
இழப்பீடு அளித்தல்
பின்வருபவையால் Spotify-க்கு ஏற்படும் அல்லது அவற்றுடன் தொடர்புடைய எந்தவொரு நியாயமான நேரடி இழப்புகள், சேதங்கள் மற்றும் நியாயமான செலவுகள் (நியாயமான வழக்கறிஞர் கட்டணங்கள் மற்றும் செலவுகள் உள்ளிட்டவை) ஆகியவற்றிலிருந்து Spotify-க்குப் பாதிப்பில்லாமல் வைத்திருக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்: (1) இந்த விதிமுறைகள் மீதான உங்களின் எந்தவொரு மீறல் (இங்கு சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் Spotify விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உட்பட); (2) நீங்கள் இடுகையிடும் அல்லது பங்களிக்கும் எந்தவொரு பயனர் உள்ளடக்கம்; (3) Spotify சேவையில் அல்லது அதன் மூலம் நீங்கள் ஈடுபடும் எந்தவொரு செயல்; மற்றும் (4) நீங்கள் எந்தவொரு சட்டத்தையும் அல்லது மூன்றாம் தரப்பினரின் உரிமைகளையும் மீறுதல்.
நிர்வகிக்கும் சட்டம், அதிகாரம் சார்ந்த நடுவர் மற்றும் இடம்
6.1 நிர்வகிக்கும் சட்டம் / நீதி எல்லை
நீங்கள் வசிக்கும் நாட்டில் கட்டாயச் சட்டங்களால் தேவைப்படாவிட்டால், ஒப்பந்தங்கள் (மற்றும் அவற்றுடன் அல்லது அவற்றின் தொடர்பில் எழும் ஒப்பந்தமற்ற சச்சரவுகள்/கிளைம்கள்) சட்டத் தேர்வு அல்லது சட்டக் கொள்கைகளின் முரண்பாடுகளைப் பொருட்படுத்தாமல் கீழே பட்டியலிடப்பட்டுள்ள மாநில அல்லது நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டவையாகும்.
அத்துடன், பொருந்தக்கூடிய கட்டாய சட்டங்களின் கீழ், நீங்கள் வசிக்கும் நாட்டில் சட்ட நடவடிக்கைகளைக் கொண்டுவர நீங்கள் தேர்வு செய்யும் விருப்பம் உள்ள அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டில் மட்டுமே நாங்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளபோது தவிர ஒப்பந்தங்கள் தொடர்பாக மற்றும் (அவற்றுடன் அல்லது அவற்றின் தொடர்பில் எழும் ஒப்பந்தமற்ற சச்சரவுகள்/கிளைம்கள் எழும்) எந்தவொரு தகராறு, கிளைம் அல்லது சர்ச்சையையும் கீழே பட்டியலிடப்பட்ட நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்குள் தீர்க்க, நீங்களும் Spotify நிறுவனமும் ஒப்புக்கொள்கிறீர்கள்
நாடு அல்லது பகுதி | சட்டத் தேர்வு |
நீதி எல்லை
|
---|---|---|
Spotify கிடைக்கும் மற்ற எல்லா நாடுகளும் பகுதிகளும்.
|
ஸ்வீடன்
|
பிரத்யேக அணுகல்; சுவீடனின் நீதிமன்றங்கள்
|
பல்கேரியா, சைப்ரஸ், எஸ்டோனியா, பிரான்ஸ், ஹாங்காங், லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, நார்வே, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், துருக்கி
|
ஸ்வீடனின் சட்டங்கள்
|
பிரத்யேகமற்ற அணுகல்; சுவீடனின் நீதிமன்றங்கள்
|
பிரேசில்
|
பிரேசிலின் சட்டங்கள்
|
பிரத்யேக அணுகல்; சாவோ பாலோவின் மாநில மற்றும் கூட்டாட்சி நீதிமன்றங்கள், சாவோ பாலோ மாநிலம், பிரேசில்
|
கனடா
|
கியூபெக்கில் வசிப்பவர்களுக்குப் பொருந்தாது: ஒன்டாரியோ மாகாணத்தின் சட்டங்கள் கியூபெக்கில் வசிப்பவர்கள்: கனடாவின் கியூபெக் மாகாணச் சட்டங்கள்
|
கியூபெக்கில் வசிப்பவர்களுக்கு பொருந்தாது: தீர்ப்புகளைச் செயல்படுத்தும் நோக்கத்தைத் தவிர பிரத்தியேகமானது; கனடாவின் ஒன்டாரியோ நீதிமன்றங்கள், கியூபெக்கில் வசிப்பவர்கள்: கனடாவின் கியூபெக் நீதிமன்றங்கள்
|
அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹோண்டுராஸ், நிகரகுவா, பனாமா, பராகுவே, பெரு, உருகுவே
|
கலிபோர்னியா மாகாணம், அமெரிக்கா
|
பிரத்யேக அணுகல்; சான் பிரான்சிஸ்கோ கவுண்டி, CA அல்லது நியூயார்க், NY-இன் மாகாண மற்றும் ஃபெடரல் நீதிமன்றங்கள்
|
ஐக்கிய ராஜ்ஜியம்
|
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சட்டங்கள்
|
பிரத்யேக அணுகல்
|
6.2 வர்க்கச் செயல்பாட்டு விலக்கு
பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில், நீங்களும் SPOTIFY நிறுவனமும் உங்கள் அல்லது அதன் தனிப்பட்ட திறனில் மட்டுமே மற்றொன்றுக்கு எதிராகக் கிளைம்களைக் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்கிறீர்கள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வேறொரு வாதி அல்லது வர்க்க அல்லது பிரதிநிதித்துவ உறுப்பினர் மூலம் அவ்வாறு செய்யக்கூடாது. நீங்களும் Spotify நிறுவனமும் ஏற்றுக்கொள்ளாவிட்டால், எந்தவொரு நடுவர் அல்லது நீதிபதியும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் கிளைம்களை ஒருங்கிணைக்கவோ அல்லது எந்தவொரு பிரதிநிதி அல்லது வர்க்க நடவடிக்கைக்குத் தலைமை தாங்கவோ முடியாது.
6.3 மத்தியஸ்தம்
நீங்கள் இந்தப் பிரிவு 6.3.-இல் உள்ள நீதி எல்லைகளுக்குள் வசித்தால், அமைந்திருந்தால், அலுவலகம் இருந்தால் அல்லது வணிகம் செய்தால், பின்வரும் அதிகாரம் சார்ந்த நடுவர் விதிகள் உங்களுக்குப் பொருந்தும்:
6.3.1 சர்ச்சை தீர்வு மற்றும் மத்தியஸ்தம்
உங்களுக்கும் Spotify நிறுவனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தங்கள் அல்லது சேவையின் பயனராக Spotify உடனான உங்கள் தொடர்பால் அல்லது அவற்றுடன் தொடர்பாக எழும் எந்தவொரு தகராறு, கிளைம் அல்லது சர்ச்சையும் (ஒப்பந்தம், அநீதி, விதி, மோசடி, தவறாகச் சித்தரித்தல் அல்லது வேறு ஏதேனும் சட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் மற்றும் ஒப்பந்தங்கள் முடிவடைந்த காலத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ கிளைம் எழுகிறதா என்பதைப் பொறுப்படுத்தாமல்) அதிகாரம் சார்ந்த தனிப்பட்ட நடுவர் தொடர்பு மூலம் தீர்மானிக்கப்படும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் அளவிற்கு மத்தியஸ்தம் முறையானதாக இல்லாமல் இருக்கலாம். மத்தியஸ்தத்திற்கான நீதிபதி அல்லது ஜூரி இல்லை, மற்றும் ஒரு மத்தியஸ்தத் தீர்ப்பிற்கான நீதிமன்ற மறுஆய்வு வரம்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தைத் தவிர்த்த மட்டுப்படுத்தப்பட்ட பிற முடிவுகள் இருக்கலாம். நடுவர் இந்த ஒப்பந்தத்தைப் பின்பற்ற வேண்டும் மற்றும் நீதிமன்றம் (வழக்கறிஞர் கட்டணங்கள் உட்பட) போலவே சேதங்களை மதிப்பிட்டு, நிவாரணத்தையும் வழங்க முடியும், மத்தியஸ்தத்தில் உள்ள தரப்பினர் தவிர் வேறு யாருக்கும் பயனளிக்கும் வகையில் நிவாரணத்தை நடுவரால் அறிவிக்க அல்லது ஆணையிட முடியாது. இந்த மத்தியஸ்த விதியானது ஒப்பந்தங்களின் நிறுத்தத்திற்குப் பிறகும் அமலில் இருக்கும்.
6.3.2 விதிவிலக்குகள்
மேலே உள்ள 6.3.1 பிரிவு இருந்தபோதிலும், எந்த நேரத்திலும் (1) சிறிய கிளைம்கள் நீதிமன்றத்திற்கும் ஒரு தனிப்பட்ட நடவடிக்கையை எடுத்துச் செல்லும், (2) அத்தகைய நடவடிக்கைகள் கிடைக்கக்கூடிய நிலையில் பொருந்தக்கூடிய ஃபெடரல், மாநில அல்லது உள்ளூர் ஏஜென்சிகள் மூலம் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்தல், (3) ஒரு நீதிமன்றத்தில் தடை நிவாரணம் தேடுதல், அல்லது (4) அறிவுசார் சொத்து மீறல் கிளைம்களுக்குத் தீர்வு காண நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தல் போனவற்றிலிருந்து இரண்டு தரப்பின் உரிமைகள் எதையும் இங்குள்ள எதுவும் தள்ளுபடி செய்யவோ, தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்வதாகக் கருதப்படமாட்டாது என்பதை நீங்களும் Spotify நிறுவனமும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
6.3.3 மத்தியஸ்த விதிகள்
நீங்கள் அல்லது நாங்கள் மத்தியஸ்த நடவடிக்கைகளைத் தொடங்கலாம். உங்களுக்கும் Spotify-க்கும் இடையிலான எந்தவொரு மத்தியஸ்தமும் இறுதியாகச் சர்வதேச வர்த்தக சபையின் ("ICC") மத்தியஸ்த விதிகளின் கீழ் ("ICC விதிகள்") ICC விதிகளின்படி நியமிக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடுவர்களால் தீர்க்கப்படும், இந்த ஒப்பந்தங்களால் மாற்றியமைக்கப்படுபவை, ICC-இன் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தால் நிர்வகிக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு அல்லது வேறு எந்த அதிகார வரம்பின் கட்டாயச் சட்டத்தால் தேவைப்படாவிட்டால் தவிர எந்தவொரு மத்தியஸ்தமும் ஆங்கில மொழியில் நடத்தப்படும், எந்தவொரு மத்தியஸ்தத்திலும் பயன்படுத்தப்பட வேண்டிய சட்டமானது சட்டக் கொள்கைகளின் தேர்வு அல்லது முரண்பாடுகளைப் பொருட்படுத்தாமல் [பிரிவு 6.1-இல் விவரிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது நாடு]-இன் சட்டமாக இருக்கும்.
6.3.4 தாக்கல் செய்யும் காலஅளவு
எந்தவொரு முறையீடும், அந்தத் தரப்பு முதலில் அறிந்த அல்லது நியாயமான முறையில் செயல், விடுபடுதல் அல்லது கிளைம் எழுவதற்கான இயல்புநிலை சூழல் அறிந்த ஒரு (1) வருடத்திற்குள் தொடங்கப்பட வேண்டும்; அந்தக் காலத்திற்குள் வலியுறுத்தப்படாத எந்தவொரு கிளைமிற்கும் தீர்வு காண எந்த உரிமையும் இருக்காது. கிளைம்களைத் தாக்கல் செய்வதற்கான ஒரு வருட வரம்புக் காலத்தைப் பொருந்தக்கூடிய சட்டம் தடைசெய்தால், எந்தவொரு கிளைமும் பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
6.3.5 அறிவிப்பு; செயல்முறை
மத்தியஸ்தத்தை நாட விரும்பும் தரப்பினர் முதலில் சர்ச்சை குறித்த எழுத்துப்பூர்வ அறிவிப்பைச் சான்றளிக்கப்பட்ட அஞ்சல் அல்லது ஃபெடரல் எக்ஸ்பிரஸ் (கையொப்பம் தேவை) மூலமாகவோ அல்லது உங்களுக்கான கோப்பில் நிஜ முகவரி எங்களிடம் இல்லாவிட்டால், மின்னணு அஞ்சல் ("அறிவிப்பு") மூலமாகவோ அனுப்ப வேண்டும். அறிவிப்புக்கான Spotify முகவரி: [Spotify, Attn: General Counsel, 4 World Trade Center, 150 Greenwich Street, 62nd Floor, New York, New York 10007, USA]. அறிவிப்பானது (1) கிளைம் அல்லது தகராறின் தன்மை மற்றும் அடிப்படையை விவரிக்க வேண்டும்; மற்றும் (2) கோரப்படும் குறிப்பிட்ட நிவாரணத்தைக் ("தேவை") குறிப்பிட வேண்டும். கிளைமை நேரடியாகத் தீர்ப்பதற்கு நல்லெண்ண முயற்சிகளைப் பயன்படுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் அதற்கான ஓர் உடன்பாட்டை நாம் எட்டவில்லை என்றால், நீங்கள் அல்லது Spotify ஒரு மத்தியஸ்த நடவடிக்கையைத் தொடங்கலாம். மத்தியஸ்தத்தின் போது, நீங்கள் அல்லது Spotify வழங்கிய எந்தவொரு தீர்வு ஏதேனும் இருந்தால் நடுவர் அவரின் இறுதி முடிவை மற்றும் தீர்ப்பைத் தெரிவிக்கும் வரை நடுவரிடம் வெளியிடப்பட மாட்டாது. நமது சர்ச்சை இறுதியாக உங்களுக்கு ஆதரவாக நடுவர் மூலம் தீர்க்கப்பட்டால், Spotify உங்களுக்கு இதைச் செலுத்தும் (1) ஏதேனும் இருந்தால் நடுவர் தீர்ப்பில் குறிப்பிட்ட தொகை, (2) நடுவரின் தீர்ப்புக்கு முன்னர் கடைசியாகச் சர்ச்சைக்காக Spotify வழங்கிய எழுத்துப்பூர்வத் தீர்வுத் தொகை; அல்லது (3) $1,000.00, இதில் பெரியது. மத்தியஸ்தத்தின் போக்கில் வெளிப்படுத்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் தகவல்களும் பெறுநரால் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்பட வேண்டும், மேலும் மத்தியஸ்த நோக்கங்களுக்காக அல்லது நடுவரின் முடிவு மற்றும் தீர்ப்பை அமல்படுத்துவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும், அத்தகைய நோக்கங்களுக்காக அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தால் தேவைப்படும் நபர்களுக்கு நம்பிக்கையுடன் அளிப்பதைத் தவிர வேறு வகைகளில் பெறுநரால் பயன்படுத்தப்படக் கூடாது. நடுவரின் முடிவையும் தீர்ப்பையும் அமல்படுத்துவதற்குத் தேவைப்படுவதைத் தவிர, நீங்களோ அல்லது Spotify நிறுவனமோ தரப்பினர் தகராறைச் சமர்ப்பித்துள்ளனர், மத்தியஸ்தம் நிலுவையில் உள்ளது அல்லது நடுவரின் முடிவு அல்லது தீர்ப்பு உட்பட வரம்பில்லாமல் எந்தவொரு பொது அறிவிப்பையும் அல்லது பொதுக் கருத்தையும் தெரிவிக்கவோ அல்லது நடுவர் தொடர்பான எந்தவொரு விளம்பரத்தையும் உருவாக்கவோ கூடாது.
6.3.6 மாற்றங்கள்
இந்த மத்தியஸ்த ஏற்பாட்டில் (அறிவிப்புக்கான Spotify முகவரியை மாற்றுவதைத் தவிர) எதிர்காலத்தில் Spotify ஏதேனும் மாற்றங்களைச் செய்தால், மாற்றத்தை ஏற்படுத்திய 30 நாட்களுக்குள் அறிவிப்புக்கான Spotify முகவரிக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை எங்களுக்கு அனுப்புவதன் மூலம் இதுபோன்ற எந்த மாற்றத்தையும் நீங்கள் நிராகரிக்கலாம், அப்போது Spotify உடனான உங்கள் கணக்கு உடனடியாக நிறுத்தப்படும், மேலும் நீங்கள் நிராகரிக்கும் திருத்தங்களுக்கு முந்தைய இந்த நடுவர் ஏற்பாடு உடனடியாகத் தொடர்ந்து அமலில் இருக்கும்.
6.3.7 அமலாகும்தன்மை
பிரிவு 6.2-இல் உள்ள வர்க்க நடவடிக்கை விலக்கானது நடுவர் மன்றத்தில் செயல்படுத்த முடியாதது எனக் கண்டறியப்பட்டால் அல்லது இந்தப் பிரிவு 6.3-இன் ஏதேனும் ஒரு பகுதி செல்லாதது அல்லது செயல்படுத்த முடியாதது எனக் கண்டறியப்பட்டால், இந்தப் பிரிவு 6.3 முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டு, செல்லாததாக்கப்படும், அவ்வாறான நிலையில் பிரிவு 6.1-இல் விவரிக்கப்பட்டுள்ள பிரத்யேக அதிகார வரம்பு மற்றும் இடமானது ஒப்பந்தங்களிலிருந்து எழும் அல்லது தொடர்புடைய எந்தவொரு செயலையும் நிர்வகிக்கும் என்பதைத் தரப்பினர் ஒப்புக்கொள்கின்றன, மேலும் எந்த நேரத்திலும் வழக்குகளைத் தாக்கல் செய்வதிலிருந்தும் தடுக்கப்படமாட்டீர்கள்.
7. இந்த விதிமுறைகளைப் பற்றி
பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ், ஒப்பந்தத்தால் கட்டுப்படுத்த முடியாத சில உரிமைகள் உங்களிடம் இருக்கலாம். இந்த விதிமுறைகள் எந்த வகையிலும் அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல.
மாற்றங்கள்
பொருந்தக்கூடிய Spotify சேவையில் (முக்கிய மாற்றங்களுக்காக, மின்னஞ்சல், சேவையில் பாப்அப் செய்தி அல்லது பிற வழிகளில் அத்தகைய அறிவிப்பைக் கூடுதலாக வழங்க முயற்சிப்போம்) திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை இடுகையிடுவது உட்பட, எந்தவொரு நியாயமான வழிகளிலும் (அவை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு) மாற்றங்களை உங்களுக்கு அறிவிப்பதன் மூலம் அவ்வப்போது இந்த விதிமுறைகளில் (இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் Spotify விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உட்பட) மாற்றங்களைச் செய்யலாம். திருத்தப்பட்ட விதிமுறைகள் அல்லது அத்தகைய மாற்றங்கள் இணைந்த பிற Spotify விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நாங்கள் இடுகையிடும் தேதிக்கு முன்னர் அல்லது அத்தகைய மாற்றங்களை உங்களுக்கு அறிவிக்கும் முன்னர் எழும் உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான எந்தவொரு தகராறிற்கும் இதுபோன்ற மாற்றங்கள் பொருந்தாது. இந்த விதிமுறைகளில் செய்யப்படும் ஏதேனும் மாற்றங்களைத் தொடர்ந்து நீங்கள் Spotify சேவையைப் பயன்படுத்துவது அத்தகைய மாற்றங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வதாகக் கருதப்படும். புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் Spotify சேவையைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பவில்லை எனில், எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் கணக்கை நிறுத்தலாம். இந்த விதிமுறைகள் கடைசியாக எப்போது மாற்றப்பட்டன என்பதை இந்த ஆவணத்தின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அமலாகும் தேதி குறிக்கிறது.
முழு ஒப்பந்தம்
இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளதைத் தவிர அல்லது உங்களுக்கும் Spotify-க்கும் இடையில் வெளிப்படையாக எழுத்துப்பூர்வ ஒப்புக் கொள்ளப்பட்டதைத் தவிர, இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Spotify-க்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் உள்ளடக்கியது மற்றும் இந்த விதிமுறைகளின் பொருள் சம்பந்தமாக எந்தவொரு எழுத்துப்பூர்வ அல்லது வாய்வழி முன் ஒப்பந்தங்களையும் மீறுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ளபடி, Spotify சேவையின் உபயோகத்தை நிர்வகிக்கும் பிற விதிமுறைகள் பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உள்ளடக்கிய குறிப்பு மூலம் இங்கு இணைக்கப்பட்டுள்ளன: Spotify பிரீமியம் புரோமோஷனல் சலுகை விதிமுறைகள்; Spotify அட்டை விதிமுறைகள்; Spotify பயனர் வழிகாட்டுதல்கள்; Spotify பதிப்புரிமைக் கொள்கை; மற்றும் Spotify ஆதரவுச் சமூக விதிமுறைகள்.
தீவிரத்தன்மை மற்றும் விலக்கு
இந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்த விதிமுறைகளின் எந்தவொரு ஏற்பாடும் எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது எந்த அளவிற்கும் செல்லுபடியாகாததாகவோ அல்லது செயல்படுத்தப்படாமலோ மாறினால், இந்த விதிமுறைகளின் மீதமுள்ள விதிகள் பாதிக்கப்படாது, மேலும் சட்டத்தால் அனுமதிக்கப்படும் அளவிற்கு அந்த விதிமுறையின் பயன்பாடு தொடர்ந்து இருக்கும்.
இந்த விதிமுறைகளை அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடுகளை அமல்படுத்துவதில் Spotify அல்லது எந்த மூன்றாம் தரப்புப் பயனாளியின் எந்தவொரு தோல்வியும் Spotify அல்லது பொருந்தக்கூடிய மூன்றாம் தரப்புப் பயனாளியின் உரிமையை விலக்காது.
ஒதுக்கீடு செய்தல்
Spotify, இந்த விதிமுறைகளில் ஏதேனும் அல்லது அனைத்தையும் ஒதுக்கீடு செய்யலாம், மேலும் இந்த விதிமுறைகளின் கீழ் அதன் உரிமைகள் அல்லது கடமைகள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ ஒதுக்கீடு செய்யலாம் அல்லது வழங்கலாம். இந்த விதிமுறைகளை நீங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒதுக்கீடு செய்யவோ, இந்த விதிமுறைகளின் கீழ் உங்கள் உரிமைகளை எந்த மூன்றாம் தரப்பினருக்கும் பரிமாற்றவோ அல்லது துணை உரிமம் வழங்கவோ கூடாது.