Spotify குக்கீ கொள்கை
மே 29, 2023 முதல் நடைமுறைக்கு வருகிறது
- குக்கீகள் என்றால் என்ன?
- குக்கீகளை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம்?
- குக்கீகளையும் ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்களையும் நிர்வகிப்பதற்கான விருப்பத்தேர்வுகள்
- இந்தக் கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்கள்
- எங்களைத் தொடர்புகொள்வதற்கான வழிகள்
குக்கீகளை Spotify எப்படிப் பயன்படுத்துகிறது என்பதை இந்தக் கொள்கை விவரிக்கிறது. இப்போதிலிருந்து Spotify குக்கீ கொள்கையைக் 'கொள்கை' என்று குறிப்பிடுவோம். குக்கீகளை Spotify எந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறது, குக்கீ அமைப்புகளை நிர்வகிப்பது தொடர்பாக உங்களுக்கு இருக்கும் விருப்பத்தேர்வுகள் ஆகியவை குறித்த தெளிவான தகவல்களை Spotify சேவைகள் மற்றும்/அல்லது இணையதளங்களின் பயனர் என்ற முறையில் உங்களுக்கு வழங்குவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும். Spotify சேவைகள் மற்றும்/அல்லது இணையதளங்களை இனி ஒட்டுமொத்தமாகச் 'சேவைகள்' எனக் குறிப்பிடுவோம்.
1. குக்கீகள் என்றால் என்ன?
குக்கீகள் என்பவை உங்கள் சாதனத்தில் பதிவிறக்கப்படுகின்ற (உதாரணமாக, நீங்கள் ஒரு வலைதளத்திற்குச் செல்லும்போது பதிவிறக்கப்படுபவை) சிறிய உரைகளாகும். குக்கீகள் மிகவும் பயனுள்ளவை, Spotify மற்றும் எங்களின் கூட்டாளர்கள் உங்கள் சாதனத்தைத் தனித்து அடையாளம் காண்பதற்கும், உங்கள் அனுபவத்தைத் தொடர உதவுவதற்கும் அவை அனுமதிக்கின்றன (உதாரணமாக, உங்கள் விருப்பத்தேர்வுகளையும் முந்தைய செயல்களையும் நாங்கள் புரிந்துகொள்ள உதவுதல்). குக்கீகள் குறித்த மேலும் பொதுவான தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்: www.allaboutcookies.org.
2. குக்கீகளை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம்?
பக்கங்களுக்கு இடையே சுலபமாக மாற உங்களுக்கு உதவுதல், உங்கள் விருப்பங்களை நினைவில் கொள்ளுதல், பொதுவாக உங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளைக் குக்கீகள் மேற்கொள்கின்றன. ஆன்லைனில் உங்களுக்குக் காட்டப்படக்கூடிய விளம்பரங்கள் உங்களுக்கும் உங்கள் ஆர்வங்களுக்கும் தொடர்புடையதாக இருப்பதை உறுதிப்படுத்தவும் குக்கீகள் உதவலாம்.
Spotify முக்கியமான இரண்டு குக்கீ வகைகளைப் பயன்படுத்துகிறது: (1) கட்டாயம் தேவைப்படும் குக்கீகள்; (2) விருப்பத்திற்குரிய குக்கீகள்:
- கட்டாயம் தேவைப்படும் குக்கீகள்
இந்தக் குக்கீகள் Spotifyயால் அல்லது எங்களின் சார்பாக மூன்றாம் தரப்பினரால் அமைக்கப்படுகின்றன. தொழில்நுட்ப ரீதியில் உள்ளடக்கத்தை வழங்குதல், உங்கள் தனியுரிமை விருப்பத்தேர்வுகளை அமைத்தல், உள்நுழைதல், பேமெண்ட்டுகளைச் செய்தல், படிவங்களை நிரப்புதல் போன்ற அம்சங்களை எங்கள் சேவைகளில் நீங்கள் பயன்படுத்த உங்களை அனுமதிப்பதற்கு இந்தக் குக்கீகள் தேவைப்படுகின்றன. இந்தக் குக்கீகள் இல்லாமல் எங்கள் சேவைகளை வழங்க முடியாது. எனவே இந்தக் குக்கீகளை நீங்கள் நிராகரிக்க முடியாது.
- விருப்பத்திற்குரிய குக்கீகள்
விருப்பத்திற்குரிய குக்கீகள் 'முதல் தரப்புக் குக்கீகளாகவோ' 'மூன்றாம் தரப்புக் குக்கீகளாகவோ' இருக்கக்கூடும். முதல் தரப்புக் குக்கீகள் Spotifyயால் நேரடியாக அல்லது எங்களின் கோரிக்கையின் பேரில் மூன்றாம் தரப்பினரால் அமைக்கப்படுகின்றன. மூன்றாம் தரப்புக் குக்கீகள் மூன்றாம் தரப்பினரால் நேரடியாக அல்லது மூன்றாம் தரப்பினரின் (எங்களின் பகுப்பாய்வு அல்லது விளம்பரச் சேவை வழங்குநர்கள் போன்றவை) கோரிக்கையின் பேரில் Spotifyயால் அமைக்கப்படுகின்றன. இந்தக் கூட்டாளர்களின் பட்டியலை இந்த இணைப்பில் பார்க்கலாம். Spotify அல்லது எங்கள் கூட்டாளர்களால் விருப்பத்திற்குரிய குக்கீகள் பின்வரும் வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன:
குக்கீ வகை
|
நோக்கம்
|
---|---|
கட்டாயம் தேவைப்படும் குக்கீகள்
|
தொழில்நுட்ப ரீதியில் உள்ளடக்கத்தை வழங்குதல், உங்கள் தனியுரிமை விருப்பத்தேர்வுகளை அமைத்தல், உள்நுழைதல், பேமெண்ட்டுகளைச் செய்தல், படிவங்களை நிரப்புதல் போன்ற அம்சங்களை எங்கள் சேவைகளில் நீங்கள் பயன்படுத்த அனுமதிப்பதற்கு இந்தக் குக்கீகள் தேவைப்படுகின்றன. இந்தக் குக்கீகள் இல்லாமல் எங்கள் சேவைகளை வழங்க முடியாது. எனவே இந்தக் குக்கீகளை நீங்கள் நிராகரிக்க முடியாது.
|
செயல்திறன் குக்கீகள்
|
பார்வையாளர்கள் எங்கள் சேவைகளை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்த தகவல்களை இந்தக் குக்கீகள் சேகரிக்கின்றன. உதாரணமாக, இந்தக் குக்கீகள் எங்கள் வலைதள வருகைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடவும், பார்வையாளர்கள் வலைதளத்தை எப்படிக் கண்டறிந்தனர் என்பதைப் புரிந்துகொள்ளவும் எங்களுக்கு உதவுகின்றன.
வலைதளத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகத் தரவைச் சேகரிப்பதற்குக் குக்கீகளைப் பயன்படுத்தும் வலைப் பகுப்பாய்வுகள் இந்த வகையைச் சேர்ந்தவையாகும். உதாரணமாக, வடிவமைப்புகளைப் பரிசோதிப்பதற்கும் பயனர்களுக்கு ஒரே மாதிரியான தோற்றத்தையும் பயனர் அனுபவத்தையும் தருவதை உறுதிப்படுத்துவதற்கும் இவை பயன்படுத்தப்படலாம். நாங்கள் உங்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல் செய்திமடல்கள் அல்லது பிற தகவல்தொடர்புகள் மூலமாகவும் தகவல்களைப் பெறலாம். செய்திமடலைத் திறத்தல், அதைப் பிறருக்கு அனுப்புதல், அதிலுள்ள உள்ளடக்கத்தைக் கிளிக் செய்தல் போன்றவையும் இதிலடங்கும். இந்தத் தகவல்கள் மூலம் எங்களின் செய்திமடலின் செயல்திறனை நாங்கள் அறிந்துகொள்ள முடியும். மேலும் உங்களுக்கு ஆர்வமுள்ள தகவல்களை நாங்கள் வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் இந்தத் தகவல்கள் உதவும்.
செயல்பாடு/ஆர்வம் அடிப்படையில் இலக்கிடும் விளம்பர நெட்வொர்க்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் குக்கீகள் இந்த வகையில் அடங்காது.
|
செயல்பாட்டுக் குக்கீகள்
|
பயனர் பெயர், மொழி, நீங்கள் வாழும் பகுதி போன்ற உங்கள் தேர்வுகளை நினைவில் கொள்ளவும் மேம்படுத்தப்பட்ட, மிகவும் தனிப்பட்ட அம்சங்கள் மற்றும் உள்ளடக்கங்களை வழங்கவும் எங்கள் சேவைகளை இந்தக் குக்கீகள் அனுமதிக்கின்றன. உதாரணமாக, நீங்கள் பிரத்தியேகமாக்கக்கூடிய வலைப் பக்கங்களில் நீங்கள் செய்த மாற்றங்களை நினைவில் கொள்ள இந்தக் குக்கீகள் பயன்படுத்தப்படலாம்.
உங்கள் அனுபவத்தை மேம்படுத்த நீங்கள் செய்யும் தேர்வுகளை இந்தக் குக்கீகள் நினைவில் கொள்கின்றன. நீங்கள் இந்தக் குக்கீகளை அனுமதிக்கவில்லை எனில், எங்கள் சேவைகளில் இதற்கு முன்னர் நீங்கள் செய்த தேர்வுகள் சேமிக்கப்படாது.
|
இலக்கிடல் அல்லது விளம்பரப்படுத்தல் குக்கீகள்
|
உங்களுக்கு அதிகம் தொடர்புடைய விளம்பரங்களை வழங்குவதற்காகவும் உங்கள் ஆர்வங்களைப் புரிந்துகொள்வதற்காகவும் உங்கள் உலாவுதல் பழக்கங்கள் குறித்த தகவல்களை இந்தக் குக்கீகள் சேகரிக்கும். ஒரு விளம்பரம் உங்களுக்குக் காட்டப்படுவதற்கான எண்ணிக்கையை வரம்பிடுதல், Spotify பகிரும் விளம்பரங்களின் செயல்திறனை அளவிடுதல் போன்றவற்றுக்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் குக்கீகள் நீங்கள் ஒரு வலைதளத்திற்குச் சென்றதைப் பதிவுசெய்கின்றன. விளம்பரதாரர்கள் போன்ற பிற நிறுவனங்களுடன் இந்தத் தகவல்கள் பகிரப்படலாம். அத்துடன், Spotify சலுகைகள், அம்சங்கள், புதிய வெளியீடுகள் போன்றவற்றைப் பிற தளங்களில் விளம்பரப்படுத்துவதற்காக அந்தத் தளங்களுடன் குறிப்பிட்ட தரவை Spotify பகிரலாம். நீங்கள் இந்தக் குக்கீகளை அனுமதிக்கவில்லை என்றாலும் விளம்பரங்களைப் பார்ப்பீர்கள். ஆனால் அவை உங்களுக்கு மிகவும் தொடர்புடையவையாக இருக்காது.
|
3. குக்கீகளையும் ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்களையும் நிர்வகிப்பதற்கான விருப்பத்தேர்வுகள்
வலை உலாவி அமைப்புகள்
உங்கள் வலை உலாவி அமைப்புகளைப் பயன்படுத்தி குக்கீகளை ஏற்கலாம், நிராகரிக்கலாம் மற்றும் நீக்கலாம். இதைச் செய்ய, உங்கள் உலாவியால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும் (பொதுவாக 'உதவி', 'கருவிகள்' அல்லது 'திருத்துதல்' அமைப்புகளுக்குள் இருக்கும்).
குக்கீகளை நிராகரிக்குமாறு உங்கள் உலாவியை அமைத்திருந்தால் உங்களால் Spotify வலைதளத்தின் சில அம்சங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, www.allaboutcookies.org என்ற வலைதளத்திற்குச் செல்லவும்.
மொபைல் அடையாளங்காட்டிகள்
உங்கள் மொபைல் சாதனத்தில், ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்களுக்கான ஒப்புதலை நீக்குவதற்கான அல்லது உங்கள் மொபைல் அடையாளங்காட்டிகளை மீட்டமைப்பதற்கான கூடுதல் விருப்பத்தேர்வுகளை ஆப்ரேட்டிங் சிஸ்டம் உங்களுக்கு வழங்கலாம். உதாரணமாக, 'Allow Apps to Request to Track' அமைப்பு (iOS சாதனங்களில்) அல்லது 'Opt out of Interest-Based Ads' அமைப்பை (Android சாதனங்களில்) பயன்படுத்தலாம். செயலிகளின் உங்கள் உபயோகம் குறித்த தகவல்கள் உங்கள் ஆர்வங்களுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்கும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை நீங்கள் வரம்பிட இந்த அமைப்புகள் அனுமதிக்கின்றன.
ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்கள்
Spotify கணக்கின் தனியுரிமை அமைப்புகள் பக்கத்தில் உள்ள 'பிரத்தியேக விளம்பரங்கள்' நிலைமாற்றியை முடக்குவதன் மூலம் ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்களைப் பெறுவதற்கான ஒப்புதலை நீக்கலாம். 'பிரத்தியேக விளம்பரங்கள்' நிலைமாற்றியைப் பயன்படுத்தி ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்களைப் பெறுவதற்கான ஒப்புதலை நீக்கினால், Spotify உங்களின் தகவல்களை மூன்றாம் தரப்பு விளம்பரக் கூட்டாளர்களுடன் பகிராது அல்லது ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட அவர்களால் பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தாது. இருப்பினும் சேவைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் Spotify பதிவுத் தகவல்கள் மற்றும் உங்களின் நிகழ்நேர Spotify பயன்பாட்டின் அடிப்படையில் விளம்பரங்களைப் பெறுவீர்கள். ஆனால் இந்த விளம்பரங்கள் உங்களுக்கு அதிகம் தொடர்புடைவையாக இருக்காது.
நாங்கள் அல்லது எங்களின் சார்பாகச் செயல்படும் சேவை வழங்குநர் உங்களுக்குக் காட்டும் விளம்பரங்களில் ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்களுக்கான ஒப்புதலை நீக்குவதற்கான 'விளம்பர விருப்பங்கள்' ஐகான் அல்லது பிற செயல்முறை இருக்கக்கூடும். விளம்பர விருப்பங்கள் ஐகானைக் கிளிக் செய்து அல்லது www.aboutads.info என்ற வலைதளத்திற்குச் சென்று பின்வருபவற்றைச் செய்யலாம்:
- ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்களுக்காக உங்கள் ஆன்லைன் செயல்பாடுகள் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பது மற்றும் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம்; அல்லது
- Digital Advertising Alliance-இல் (DAA) இணைந்துள்ள நிறுவனங்கள் ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்களுக்காக உங்கள் தரவைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை நீக்கலாம்.
4. இந்தக் கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்கள்
நாங்கள் இந்தக் கொள்கையில் அவ்வப்போது மாற்றங்களைச் செய்யக்கூடும்.
இந்தக் கொள்கையில் நாங்கள் மாற்றங்களைச் செய்யும்போது, அந்தச் சூழலுக்குத் தகுந்த தெளிவான அறிவிப்பை உங்களுக்கு வழங்குவோம். உதாரணமாக, Spotify சேவைகளில் தெளிவான அறிவிப்பைக் காட்டக்கூடும் அல்லது மின்னஞ்சல்/சாதன அறிவிப்பை உங்களுக்கு அனுப்பக்கூடும்.
5. எங்களைத் தொடர்புகொள்வதற்கான வழிகள்
இந்தக் கொள்கையைப் படித்ததற்கு நன்றி. இந்தக் குக்கீ கொள்கை தொடர்பாக உங்களுக்குக் கேள்விகள் ஏதேனும் இருந்தால், தனியுரிமை மையத்தில் உள்ள வாடிக்கையாளர் உதவிச் சேவையைத் தொடர்பு கொள்வதற்கான படிவத்தில் உள்ள விவரங்களைப் பயன்படுத்தி அல்லது பின்வரும் முகவரிக்கு அஞ்சல் அனுப்பி எங்களின் தரவுப் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்புகொள்ளுங்கள்
Spotify AB
Regeringsgatan 19, SE-111 53 Stockholm
Sweden
SE556703748501
© Spotify AB.