Spotifyயின் தனியுரிமைக் கொள்கை
அக்டோபர் 10, 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது
1. இந்தக் கொள்கை பற்றிய அறிமுகம்
2. உங்கள் தனிப்பட்ட தரவுக்கான உரிமைகளும் கட்டுப்பாடுகளும்
3. உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவு
4. உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்துவதன் நோக்கம்
5. உங்கள் தனிப்பட்ட தரவைப் பகிர்தல்
7. பிற நாடுகளுக்குத் தரவைப் பரிமாற்றுதல்
8. உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்
10. இந்தக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
11. எங்களைத் தொடர்புகொள்வது எப்படி?
1. இந்தக் கொள்கை பற்றிய அறிமுகம்
Spotify ABயில் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்கும் விதத்தை இந்தக் கொள்கை விளக்குகிறது.
பின்வருவனவற்றுக்கு இது பொருந்தும்:
- ஒரு பயனர் என்ற முறையில், Spotify ஸ்ட்ரீமிங் சேவைகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்துதல். உதாரணமாக, இதில் அடங்குபவை:
- எந்தவொரு சாதனத்திலும் நீங்கள் Spotifyயைப் பயன்படுத்துதல்
- உங்கள் பயனர் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்குதல்
- எங்கள் சேவைகளை வழங்கத் தேவையான உள்கட்டமைப்பு
- மற்றொரு செயலியுடன் உங்கள் Spotify கணக்கை இணைத்தல்
- எங்கள் இலவச அல்லது கட்டண ஸ்ட்ரீமிங் விருப்பங்கள் (ஒவ்வொன்றும் ஒரு 'சேவை விருப்பம்')
- இந்தத் தனியுரிமைக் கொள்கையுடன் தொடர்புடைய மற்ற Spotify சேவைகள். இதில் Spotify இணையதளங்கள், வாடிக்கையாளர் சேவை, சமூகத் தளம் ஆகியவையும் அடங்கும்
தற்போது முதல் இவை அனைத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 'Spotify சேவை' என்று குறிப்பிடுவோம்.
அவ்வப்போது நாங்கள் புதிய சேவைகளை உருவாக்கலாம் அல்லது கூடுதல் சேவைகளை வழங்கலாம். அந்தச் சேவைகளை அறிமுகப்படுத்தும்போது நாங்கள் வேறு விதமாகக் குறிப்பிடாத வரை அவையும் இந்தக் கொள்கைக்கு உட்படும்.
இந்தக் கொள்கை...
- Spotify பயன்பாட்டு விதிமுறைகள் தொடர்பானது அல்ல, அது ஒரு தனி ஆவணமாகும். Spotify சேவையைப் பயன்படுத்துவது தொடர்பாக உங்களுக்கும் Spotifyக்கும் இடையேயான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தைப் பயன்பாட்டு விதிமுறைகள் குறிப்பிடுகின்றன. மேலும் இது உங்கள் Spotify விதிமுறைகள் மற்றும் உங்களின் பயனர் உரிமைகள் பற்றியும் விவரிக்கிறது
- பிற Spotify சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பானது அல்ல, அவற்றுக்கென சொந்தத் தனியுரிமைக் கொள்கை உள்ளது. பிற Spotify சேவைகளில் Anchor, Soundtrap, Megaphone, Spotify Live செயலி ஆகியவை அடங்கும்
பிற தகவல் மூலங்கள் மற்றும் அமைப்புகள்
உங்கள் தனிப்பட்ட தரவு பற்றிய முக்கியத் தகவல்களை இந்தக் கொள்கை கொண்டுள்ளது. இருப்பினும், எங்களின் பிற தனியுரிமை தகவல் மூலங்களையும் கட்டுப்பாடுகளையும் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்:
- தனியுரிமை மையம்: முக்கியமான விஷயங்கள் குறித்த சுருக்கவிவரங்களைக் கொண்ட பயனருக்கேற்ற ஹப்.
- கணக்குத் தனியுரிமை: பிரத்தியேக விளம்பரப்படுத்தல் உட்பட குறிப்பிட்ட சில தனிப்பட்ட தரவு செயலாக்கப்படுவதைக் கட்டுப்படுத்தலாம்.
- அறிவிப்பு அமைப்புகள்: Spotifyயில் இருந்து எந்த மாதிரியான சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளை பெற விரும்புகிறீர்கள் என்பதை அமைக்கலாம்.
- அமைப்புகள் (Spotifyயின் டெஸ்க்டாப் மற்றும் மொபைலுக்கான பதிப்புகளில் இருக்கும்): 'சமூகம்' அல்லது 'வெளிப்படையான பாலியல் சார்ந்த உள்ளடக்கம்' போன்ற Spotify சேவையின் குறிப்பிட்ட அம்சங்களைக் கட்டுப்படுத்தலாம். 'சமூகம்' என்னும் அமைப்பில் நீங்கள் இவற்றைச் செய்யலாம்:
- தனிப்பட்ட அமர்வைத் தொடங்கலாம்
- Spotifyயில் உங்களைப் பின்தொடர்பவர்களுடன் நீங்கள் கேட்பதைப் பகிர வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம்
- உங்கள் பொதுச் சுயவிவரத்தில் சமீபத்தில் பிளே செய்த கலைஞர்களைக் காட்ட வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம்
'வெளிப்படையான பாலியல் சார்ந்த உள்ளடக்கம்' எனும் அமைப்பில் உங்கள் Spotify கணக்கில் 'வெளிப்படையானது' என தரமதிப்பிடப்பட்ட உள்ளடக்கத்தைப் பிளே செய்யலாமா என்பதைக் கட்டுப்படுத்தலாம்.
- குக்கீகள் கொள்கை: நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்தும் விதம் மற்றும் உங்கள் குக்கீ விருப்பத்தேர்வுகளை நிர்வகிக்கும் விதம் பற்றிய தகவல்கள் இதிலிருக்கும். குக்கீகள் என்பவை நீங்கள் ஓர் இணையதளத்திற்குச் செல்லும்போது உங்கள் மொபைல், டேப்லெட், கணினி போன்றவற்றில் சேமிக்கப்படும் கோப்புகள் ஆகும்.
2. உங்கள் தனிப்பட்ட தரவுக்கான உரிமைகளும் கட்டுப்பாடுகளும்
தனிநபர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தரவு மீதான உரிமைகளைப் பல்வேறு தனியுரிமைச் சட்டங்கள் வழங்குகின்றன. இந்த சட்டங்களில் பொதுவான தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அல்லது 'GDPR' அடங்கும்.
உங்கள் தரவைச் செயலாக்குவதற்காக Spotify குறிப்பிட்ட 'சட்ட அடிப்படையைப்' பயன்படுத்தும்போது மட்டுமே சில உரிமைகள் பொருந்தும். நாங்கள் ஒவ்வொரு சட்ட அடிப்படை பற்றியும் அவற்றை Spotify எப்போது பயன்படுத்தும் என்பதையும் பிரிவு 4ல் உள்ள 'உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்துவதன் நோக்கம்' என்பதில் விளக்கியுள்ளோம்.
கீழுள்ள அட்டவணையில் விவரிக்கப்படுபவை:
- உங்கள் உரிமைகள்
- அவை பொருந்தக்கூடிய சூழல்கள் (எ.கா. சட்ட அடிப்படை தேவைப்படும் சூழல்)
- அவற்றைப் பயன்படுத்தும் விதம்
இவற்றுக்கு உங்களுக்கு உரிமையுள்ளது...
|
எப்படி? | |
---|---|---|
தெரிந்துகொள்ளுதல் |
நாங்கள் செயலாக்கும் உங்களுடைய தனிப்பட்ட தரவையும் அவை செயலாக்கப்படும் விதத்தையும் பற்றித் தெரிந்துகொள்ளுதல். |
இவற்றின் மூலம் உங்களுக்குத் தெரிவிப்போம்:
|
அணுகல் |
நாங்கள் செயலாக்கும் உங்களுடைய தனிப்பட்ட தரவிற்கான அணுகலைக் கோருதல். |
Spotifyயில் இருந்து உங்களின் தனிப்பட்ட தரவின் நகலைக் கோருவதற்கான வழிகள்:
உங்கள் தரவைப் பதிவிறக்கும்போது GDPR-இன் பிரிவு 15ன் கீழ் Spotify வழங்கவேண்டிய உங்கள் தரவு பற்றிய தகவல்களைப் பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட தரவு செயலாக்கப்படும் விதத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பினால் எங்களைத் தொடர்புகொள்ளவும். |
சரிசெய்தல் |
துல்லியமற்ற அல்லது முழுமையற்ற உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் திருத்தவோ மாற்றவோ கோருதல். |
பயனர் தரவைத் திருத்த, உங்கள் கணக்கில் ‘சுயவிவரத்தைத் திருத்து’ என்பதற்குச் செல்லலாம் அல்லது எங்களைத் தொடர்புகொள்ளலாம். |
நீக்குதல் |
உங்களின் குறிப்பிட்ட சில தனிப்பட்ட தரவை நீக்கக் கோருதல். உதாரணமாக, பின்வரும் சூழல்களில் தனிப்பட்ட தரவை நீக்கும்படி எங்களிடம் நீங்கள் கோரலாம்:
சில சூழல்களில் Spotifyயால் உங்கள் தரவை நீக்க முடியாது, அவற்றுக்கான உதாரணங்கள் பின்வருமாறு:
|
Spotifyயில் இருந்து உங்கள் தனிப்பட்ட தரவை நீக்கப் பல வழிகள் உள்ளன:
|
கட்டுப்பாடு |
உங்கள் தனிப்பட்ட தரவு அனைத்தையும் அல்லது சிலவற்றை நாங்கள் செயலாக்குவதை நிறுத்தும்படி கோருதல். பின்வரும் சூழல்களில் நீங்கள் இதைச் செய்யலாம்:
இந்தச் செயலாக்கத்தைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ நிறுத்தும்படி நீங்கள் கோரலாம். |
எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் கட்டுப்பாட்டிற்கான உங்கள் உரிமையைப் பயன்படுத்தலாம். |
மறுப்பு தெரிவித்தல் |
நாங்கள் உங்களின் தனிப்பட்ட தரவை செயலாக்குவதற்கு மறுப்பு தெரிவித்தல். பின்வரும் சூழல்களில் நீங்கள் இதைச் செய்யலாம்:
|
மறுப்பு தெரிவித்தலுக்கான உங்கள் உரிமையைப் பயன்படுத்த:
|
தரவுப் பெயர்வுத்திறன் |
உங்கள் தனிப்பட்ட தரவின் நகலை மின்னணு வடிவில் கோருதல் மற்றும் வேறொரு தரப்பின் சேவையில் பயன்படுத்தும் பொருட்டு அந்தத் தரவைப் பரிமாற்றுவதற்கான உரிமை. 'ஒப்புதல்' அல்லது 'ஒப்பந்தச் செயல்பாடு' எனும் சட்ட அடிப்படைகளின் கீழ் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்கும்போது எங்களிடம் அந்தத் தரவைப் பரிமாற்றம் செய்யும்படிக் கோரலாம். இருப்பினும் Spotify எந்தவொரு கோரிக்கையையும் இயன்ற அளவிற்கு ஏற்றுக்கொள்ளவே முயற்சிக்கும். |
பெயர்வுத்திறனுக்கான உரிமையைப் பயன்படுத்துவதற்கான வழிமுறையைப் பற்றிய தகவல்களுக்கு மேலே உள்ள ‘அணுகல்’ பிரிவைப் பார்க்கவும். |
தானியங்கு முடிவெடுத்தலுக்கு உட்படாதிருத்தல் |
உங்களுக்குச் சட்டரீதியான அல்லது அதற்குச் சமமான குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தானியங்கு முடிவெடுத்தல் செயல்முறையின் (மனிதப் பங்களிப்பின்றி எடுக்கப்படும் முடிவுகள்) முடிவை (சுயவிவரக் குறிப்பு உருவாக்குதல் உட்பட) முற்றிலும் சாராதிருத்தல். |
Spotify சேவையில் இந்த வகையான தானியங்கு முடிவெடுத்தலை Spotify மேற்கொள்ளாது. |
ஒப்புதலைத் திரும்பப் பெறுதல் |
உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிப்பது அல்லது பயன்படுத்துவது தொடர்பாக நீங்கள் அளித்த ஒப்புதலைத் திரும்பப் பெறுதல். 'ஒப்புதல்' எனும் சட்ட அடிப்படையின் கீழ் Spotify உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்கினால், நீங்கள் ஒப்புதலை திரும்பப் பெறலாம். |
உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெற, நீங்கள்:
|
புகாரளிக்கும் உரிமை |
ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துகள் இருந்தால் தனியுரிமைப் பாதுகாப்பிற்கான ஸ்வீடன் ஆணையத்தையோ (Swedish Authority for Privacy Protection) உங்கள் உள்ளூர் தரவுப் பாதுகாப்பு ஆணையத்தையோ தொடர்புகொள்ளவும். |
ஸ்வீடன் ஆணையம் குறித்த விவரங்களை இங்கே கண்டறியலாம். உங்கள் உள்ளூர் தரவுப் பாதுகாப்பு ஆணையத்தின் வலைதளத்திற்கும் செல்லலாம். |
பிரத்தியேக விளம்பரங்களுக்கான கட்டுப்பாடுகள்
பிரத்தியேக விளம்பரங்கள் என்றால் என்ன?
- உங்களைப் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி உங்களுக்குக் காட்டப்படும் மிகவும் தொடர்புடைய விளம்பரங்கள் 'பிரத்தியேக விளம்பரங்கள்' எனப்படுகின்றன. ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்கள் எனவும் இவை அழைக்கப்படுகின்றன.
- உங்களுக்குக் கார்கள் பிடிக்கும் என்பதைப் தெரியப்படுத்தும் தகவலை விளம்பரக் கூட்டாளர் கொண்டிருப்பது பிரத்தியேக விளம்பரத்திற்கு உதாரணமாகும். இதன்மூலம் எங்களால் கார்கள் பற்றிய விளம்பரங்களை உங்களுக்குக் காண்பிக்க முடியும்.
பிரத்தியேக விளம்பரங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது:
- உங்கள் கணக்குத் தனியுரிமை பக்கத்தில் 'பிரத்தியேக விளம்பரங்கள்' என்பதன் கீழ் பிரத்தியேக விளம்பரப்படுத்தலை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
- எப்பிசோடின் நிகழ்ச்சி விளக்கத்தில் உள்ள இணைப்பைப் பயன்படுத்தியும் சில பாட்காஸ்ட்டுகளுக்கான பிரத்தியேக விளம்பரங்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம். உள்ளடக்க வழங்குநர் தனது பாட்காஸ்ட்டில் பிரத்தியேக விளம்பரங்களைச் சேர்த்து பாட்காஸ்ட்டிற்கான நிதி உதவியைப் பெறும் சூழலில் இது பொருந்தும். பாட்காஸ்ட்டுக்கான ஹோஸ்டிங் வழங்குநரால் இந்தக் கட்டுப்பாடுகள் நிர்வகிக்கப்படுகின்றன, அது Spotifyயாக இல்லாமலும் இருக்கலாம்.
பிரத்தியேக விளம்பரங்கள் காட்டப்படுவதற்கான ஒப்புதலை உங்கள்கணக்குத் தனியுரிமை பக்கத்தில் நீங்கள் 'விலக்கிக் கொள்வதற்குத்' தேர்வுசெய்தாலும், உங்களுக்கு விளம்பரங்கள் தொடர்ந்து காட்டப்படும். பொருந்தும் பட்சத்தில் எங்களின் இலவச மற்றும் கட்டணச் சேவை விருப்பங்களில் இது சேர்க்கப்படலாம் (எ.கா., பாட்காஸ்ட்டில் விளம்பரப்படுத்துதல்). உங்கள் பதிவுத் தகவல்கள் மற்றும் எங்கள் சேவைகளில் தற்போது நீங்கள் கேட்கும் உள்ளடக்கங்களின் அடிப்படையில் இந்த வகையான விளம்பரங்கள் காட்டப்படும். உதாரணமாக, நீங்கள் சமையல் தொடர்பான பாட்காஸ்ட்டைக் கேட்கிறீர்கள் எனில் ஃபுட் ப்ராஸசருக்கான விளம்பரத்தைக் கேட்கக்கூடும்.
3. உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவு
உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவின் வகைகள் இந்த அட்டவணைகளில் காட்டப்பட்டுள்ளன.
நீங்கள் Spotify சேவைக்காகப் பதிவு செய்யும்போது
அல்லது உங்கள் கணக்கைப் புதுப்பிக்கும்போது சேகரிக்கப்படுபவை
|
|
---|---|
வகை |
விளக்கம் |
பயனர் தரவு |
உங்கள் Spotify கணக்கை உருவாக்க எங்களுக்குத் தேவைப்படக்கூடிய மற்றும் நீங்கள் Spotify சேவையைப் பயன்படுத்த உதவும் தனிப்பட்ட தரவு. உங்களிடம் உள்ள 'சேவை விருப்பத்தின்’ வகையைப் பொறுத்தே சேகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் தரவின் வகை அமையும். மேலும் இது நீங்கள் கணக்கை உருவாக்கும் விதம், நீங்கள் வசிக்கும் நாடு, உள்நுழைய மூன்றாம் தரப்புச் சேவைகளைப் பயன்படுத்தினால் அந்தச் சேவைகள் ஆகியவற்றையும் பொறுத்தது. இதில் பின்வரும் உங்கள் தகவல்களும் அடங்கக்கூடும்:
இவற்றில் சில தரவை உங்களிடமிருந்தே பெறுவோம், எ.கா. பதிவு செய்தல் படிவம், கணக்குப் பக்கம் உங்கள் சாதனத்தில் இருந்தும் சில தரவைப் பெறுவோம், எ.கா. நாடு, பிராந்தியம். இந்தத் தரவு எவ்வாறு சேகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்குப் 'பயன்பாட்டுத் தரவு' வகையில் உள்ள ‘உங்கள் பொதுவான (துல்லியமற்ற) இருப்பிடம்’ என்பதைப் பார்க்கவும். |
முகவரித் தரவு |
பின்வரும் காரணங்களுக்காகத் உங்கள் முகவரியை நாங்கள் கேட்கக்கூடும் மற்றும் செயலாக்கக்கூடும்:
சில சமயங்களில் உங்கள் முகவரியை நீங்கள் சரிபார்க்க உதவ, நாங்கள் Google Maps போன்ற மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தக்கூடும். |
Spotify சேவையை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் சேகரிக்கப்படுபவை | |
---|---|
வகைகள் |
விளக்கம் |
பயன்பாட்டுத் தரவு |
நீங்கள் Spotify சேவையை அணுகும்போதோ பயன்படுத்தும்போதோ சேகரித்துச் செயலாக்கப்படும் உங்களின் தனிப்பட்ட தரவு. இதில் அடங்கக்கூடிய தகவல்களின் சில வகைகள் பின்வரும் பிரிவுகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. நீங்கள் Spotifyயை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய தகவல்கள் இவை உட்பட:
உங்கள் தொழில்நுட்பத் தரவு இவை உட்பட:
உங்கள் பொதுவான (துல்லிமற்ற) இருப்பிடம் உங்கள் பொதுவான இருப்பிடத்தில் நாடு, பிராந்தியம், மாநிலம் ஆகியவை அடங்கும். தொழில்நுட்பத் தரவு (எ.கா. உங்கள் IP முகவரி, உங்கள் சாதனத்தின் மொழி அமைப்பு) அல்லது பேமெண்ட்டிற்கான நாணய வகையின் மூலம் இந்தத் தகவல்களை நாங்கள் தெரிந்துகொள்வோம். பின்வரும் நோக்கங்களுக்காக இந்தத் தகவல்கள் தேவை:
உங்கள் சாதனத்தின் சென்சார் தரவு இயக்கம் அல்லது திசையமைப்பு மூலம் உருவாக்கப்படும் சாதன சென்சார் தரவு தேவைப்படும் Spotify சேவையின் அம்சங்களை வழங்க வேண்டியிருந்தால் இந்தத் தரவு சேகரிக்கப்படும். இது உங்கள் சாதனத்தை நீங்கள் நகர்த்தும் அல்லது பிடிக்கும் விதம் குறித்து உங்கள் சாதனம் சேகரிக்கும் தரவாகும். |
எங்களிடம் நீங்கள் வழங்கக்கூடிய கூடுதல் தரவு
|
|
---|---|
வகைகள் |
விளக்கம் |
குரல் தரவு |
உங்கள் பகுதியில் குரல் அம்சங்கள் கிடைக்கும் பட்சத்தில், அவற்றைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் தேர்வுசெய்திருந்தால் நாங்கள் குரல் தரவைச் சேகரித்துச் செயலாக்குவோம். உங்கள் குரலின் ஆடியோ ரெக்கார்டிங்குகள் மற்றும் அந்த ரெக்கார்டிங்குகளின் எழுத்தாக்கங்களையே குரல் தரவு என்கிறோம். வெவ்வேறு குரல் அம்சங்கள் செயல்படும் விதத்தையும் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் முடக்கலாம் என்பதைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ள, எங்கள் குரல் கட்டுப்பாட்டுக் கொள்கையைப் பார்க்கவும். |
பேமெண்ட் மற்றும் பர்ச்சேஸ் குறித்த தரவு |
Spotifyயில் எதையேனும் பர்ச்சேஸ் செய்தாலோ கட்டணச் சேவை விருப்பத்தேர்வு அல்லது கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவுசெய்தாலோ உங்கள் பேமெண்ட் தரவை நாங்கள் செயலாக்க வேண்டியிருக்கும். சேகரிக்கப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் தனிப்பட்ட தரவு பேமெண்ட் முறையைப் பொறுத்து மாறுபடக்கூடும். இதில் அடங்கும் தகவல்கள்:
|
கருத்துக்கணிப்பு மற்றும் ஆய்வு தொடர்பான தரவு |
கருத்துக்கணிப்புக்குப் பதிலளிக்கும்போது அல்லது பயனர் ஆய்வில் பங்கேற்கும்போது நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரித்துப் பயன்படுத்துவோம். |
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சில தரவை நாங்கள் மூன்றாம் தரப்பினரிடம் இருந்து பெறுவோம். அந்த மூன்றாம் தரப்பினரின் வகைகளைக் கீழுள்ள அட்டவணை விவரிக்கிறது.
உங்கள் தரவை எங்களுக்கு அளிக்கும் மூன்றாம் தரப்பு மூலங்கள் | ||
---|---|---|
மூன்றாம் தரப்பினரின் வகைகள் |
விளக்கம் |
தரவு வகைகள் |
அங்கீகரிப்புக் கூட்டாளர்கள் |
வேறொரு சேவையின் மூலம் Spotify சேவையில் நீங்கள் பதிவு செய்யவோ உள்நுழையவோ செய்தால், அந்தச் சேவை உங்கள் தகவல்களை எங்களுக்கு அனுப்பும். Spotify சேவையில் உங்கள் கணக்கை உருவாக்க இந்தத் தகவல்கள் உதவும். |
பயனர் தரவு |
உங்கள் Spotify கணக்குடன் நீங்கள் இணைக்கக்கூடிய மூன்றாம் தரப்புச் செயலிகள், சேவைகள் மற்றும் சாதனங்கள் |
உங்கள் Spotify கணக்கை மூன்றாம் தரப்புச் செயலி, சேவை, சாதனங்கள் போன்றவற்றுடன் இணைத்தால், அவற்றுடன் ஒருங்கிணைப்பதற்காக நாங்கள் அவற்றிலிருந்து தகவல்களைச் சேகரித்துப் பயன்படுத்தக்கூடும். மூன்றாம் தரப்புச் செயலிகள், சேவைகள் அல்லது சாதனங்களில் அடங்குபவை:
குறிப்பிட்ட சில மூன்றாம் தரப்பினரிடம் இருந்து உங்கள் தகவல்களைச் சேகரிக்கும் முன் உங்களிடம் அனுமதி கேட்போம். |
பயனர் தரவு பயன்பாட்டுத் தரவு |
தொழில்நுட்பச் சேவைக் கூட்டாளர்கள் |
குறிப்பிட்ட தரவை வழங்கக்கூடிய தொழில்நுட்பச் சேவைக் கூட்டாளர்களுடன் இணைந்து நாங்கள் செயல்புரிகிறோம். துல்லியமற்ற இருப்பிடத் தரவுடன் (எ.கா. நாடு அல்லது பிராந்தியம், நகரம், மாநிலம்) IP முகவரிகளை மேப்பிங் செய்வதும் இதிலடங்கும். Spotify சேவை, உள்ளடக்கம், அம்சங்கள் ஆகியவற்றை Spotify வழங்குவதை இது சாத்தியமாக்குகிறது. பயனர் கணக்குகளைப் பாதுகாக்க எங்களுக்கு உதவும் பாதுகாப்புச் சேவை வழங்குநர்களுடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். |
பயனர் தரவு பயன்பாட்டுத் தரவு |
பேமெண்ட் கூட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் |
மூன்றாம் தரப்பு (எ.கா. தொலைத்தொடர்பு நிறுவனங்கள்) அல்லது இன்வாய்ஸ் மூலம் பணம் செலுத்தத் தேர்வுசெய்தால், எங்கள் பேமெண்ட் கூட்டாளர்களிடம் இருந்து நாங்கள் தரவைப் பெறக்கூடும். இவற்றைச் செய்ய இது எங்களை அனுமதிக்கிறது:
வணிகரிடம் உங்களைத் திசைதிருப்பினால், உங்கள் பர்ச்சேஸ் தொடர்பான தரவை வணிகரிடம் இருந்து பெறுவோம். உதாரணமாக, மூன்றாம் தரப்புத் தளத்தில் உள்ள கலைஞரின் விற்பனைப் பொருட்கள் ஸ்டோருக்கு அல்லது மூன்றாம் தரப்பின் டிக்கெட் வழங்கும் வலைதளத்திற்கு நாங்கள் உங்களைத் திசைதிருப்பலாம். இந்தத் தரவைப் பெறுவதன் மூலம் இவற்றை நாங்கள் செய்யலாம்:
|
பேமெண்ட் மற்றும் பர்ச்சேஸ் குறித்த தரவு |
விளம்பர மற்றும் சந்தைப்படுத்துதல் கூட்டாளர்கள் |
குறிப்பிட்ட விளம்பர மற்றும் சந்தைப்படுத்துதல் கூட்டாளர்களிடம் இருந்து, உங்கள் ஆர்வங்கள் மற்றும் விருப்பத்தேர்வுகள் பற்றிய அவர்களின் புரிதலை நாங்கள் தெரிந்துகொள்வோம். மிகவும் தொடர்புடைய விளம்பரங்களையும் சந்தைப்படுத்துதலையும் வழங்க இது எங்களை அனுமதிக்கிறது. |
பயன்பாட்டுத் தரவு |
வாங்கிய நிறுவனங்கள் |
நாங்கள் வாங்கும் நிறுவனங்களிடம் இருந்தும் உங்களைப் பற்றிய தரவைப் பெறக்கூடும். எங்கள் சேவைகள், தயாரிப்புகள் மற்றும் நாங்கள் வழங்குபவற்றை மேம்படுத்த இது உதவுகிறது. |
பயனர் தரவு பயன்பாட்டுத் தரவு |
நீங்கள் Spotify மொபைல் செயலியைப் பதிவிறக்கி, பயனராகப் பதிவுசெய்யாமல் Spotifyயைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் பயன்பாட்டுத் தரவு உட்பட நீங்கள் Spotify சேவையை பயன்படுத்துவது தொடர்பாகக் குறைவான தகவல்களையே சேகரிப்போம். நீங்கள் சேவையை அணுகும் மற்றும் பயன்படுத்தும் விதத்தை அறிந்துகொள்ள இவ்வாறு செய்கிறோம். உங்களுக்குப் பொருத்தமான அனுபவத்தை வழங்குகிறோம் என்பதை உறுதிசெய்துகொள்ளவும் இவ்வாறு செய்கிறோம். உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தின் அடிப்படையிலான அனுபவத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எங்கள் சேவையை முழுமையாகப் பெற Spotify கணக்கை உருவாக்க நீங்கள் முடிவுசெய்தால், உங்கள் Spotify கணக்கின் தரவுடன் இந்தத் தரவையும் ஒன்றிணைத்திடுவோம்.
4. உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்துவதன் நோக்கம்
கீழுள்ள அட்டவணையில் விவரிக்கப்படுபவை:
- உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குவதன் நோக்கம்
- ஒவ்வொரு நோக்கத்திற்காகவும் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாங்கள் அளிக்கும் சட்டப்பூர்வக் காரணங்கள் (ஒவ்வொன்றும் 'சட்ட அடிப்படை' என அழைக்கப்படும்)
- ஒவ்வொரு நோக்கத்திற்காகவும் நாங்கள் பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட தரவின் வகைகள். இந்த வகைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள பிரிவு 3 'நாங்கள் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தரவு' என்பதைப் பார்க்கவும்
இந்த அட்டவணையை நீங்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் 'சட்ட அடிப்படை' ஒவ்வொன்றுக்குமான பொதுவான விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
- ஒப்பந்தச் செயல்பாடு: Spotifyக்கு (அல்லது மூன்றாம் தரப்பு) உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்க இது தேவைப்படும் சூழல்கள்:
- உங்களுடனான ஒப்பந்தத்தின் கீழ், கடமைகளுக்கு இணங்கும்போது. பயன்பாட்டு விதிமுறைகளின் கீழ் உங்களுக்கு Spotify Service சேவையை வழங்குவதற்கான Spotifyயின் கடமைகளும் இதிலடங்கும் அல்லது
- உங்களுடனான புதிய ஒப்பந்தம் தொடங்கும் முன் தகவல்களைச் சரிபார்க்கும்போது.
- சட்டப்படியான நலநோக்கம்: உங்களுக்கும் பிற Spotify பயனர்களுக்கும் ஏற்படக்கூடிய அபாயங்களைத் கருத்தில் கொண்டு, அவசியமான மற்றும் நியாயப்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட முறையில் Spotify அல்லது மூன்றாம் தரப்பு உங்கள் தனிப்பட்ட தரவை பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கும்போது. உதாரணமாக, அனைத்துப் பயனர்களுக்குமான Spotify சேவையை மேம்படுத்த உங்கள் பயன்பாட்டுத் தரவைப் உபயோகித்தல். குறிப்பிட்ட காரணத்தைப் புரிந்துகொள்ள விரும்பினால் எங்களைத் தொடர்புகொள்ளவும்.
- ஒப்புதல்: ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உங்கள் தனிப்பட்ட தரவை Spotify பயன்படுத்தவற்காக உங்கள் ஒப்புதலைத் தெரிவிக்குமாறு Spotify கேட்கும்போது.
- சட்டப்பூர்வக் கடமைகளுடன் இணங்குதல்: சட்டத்துடன் இணங்குவதற்காக உங்கள் தனிப்பட்ட தரவை Spotify கட்டாயமாகச் செயலாக்கத் தேவைப்படும்போது.
உங்கள் தரவை செயலாக்குவதற்கான நோக்கம் |
நோக்கத்தை அனுமதிக்கும் சட்ட அடிப்படை
|
நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் தனிப்பட்ட தரவின் வகைகள் |
---|---|---|
உங்களுடனான எங்கள் ஒப்பந்தத்திற்கு இணங்க Spotify சேவையை வழங்குவதற்கு. உதாரணமாக, பின்வருவனற்றுக்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்தும்போது:
|
ஒப்பந்தச் செயல்பாடு |
|
Spotify சேவையின் பிற அம்சங்களை வழங்குவதற்கு. உதாரணமாக, Spotify உள்ளடக்கத்திற்கான இணைப்பைப் பிறருடன் பகிர்வதற்கு உங்களை அனுமதிப்பதற்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்தும்போது. |
சட்டப்படியான நலநோக்கம் எங்களின் சட்டப்படியான நலநோக்கங்களில் இவை அடங்கும்:
|
|
Spotify சேவையின் குறிப்பிட்ட சில விருப்பத்தேர்விலான கூடுதல் அம்சங்களை வழங்குவதற்கு. இதுபோன்ற சூழலில் உங்கள் ஒப்புதலை நாங்கள் உறுதியாகக் கேட்போம். |
ஒப்புதல் |
|
Spotify சேவையில் உள்ள சிக்கல்களைக் கண்டறிவதற்கு, பிழையறிந்து திருத்துவதற்கு மற்றும் சரிசெய்வதற்கு. |
ஒப்பந்தச் செயல்பாடு |
|
Spotify சேவைக்கான புதிய அம்சங்கள், தொழில்நுட்பங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு மற்றும் உருவாக்குவதற்கு. உதாரணமாக:
|
சட்டப்படியான நலநோக்கம் எங்கள் பயனர்களுக்கான தயாரிப்புகளையும் அம்சங்களையும் உருவாக்குவதும் மேம்படுத்துவதும் எங்களின் சட்டப்படியான நலநோக்கங்களில் அடங்கும். |
|
சட்டப்படி உங்கள் ஒப்புதலைப் பெற்று சந்தைப்படுத்துவதற்கு அல்லது விளம்பரப்படுத்துவதற்கு. உதாரணமாக, உங்கள் ஆர்வங்களைப் புரிந்துகொள்வதற்காகக் குக்கீகளைப் பயன்படுத்தும்போது அல்லது மின்னஞ்சல் சந்தைப்படுத்துதலுக்குச் சட்டப்படி ஒப்புதல் தேவைப்படும்போது. |
ஒப்புதல் |
|
உங்கள் ஒப்புதல் தேவைப்படாத பிற சந்தைப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல் நோக்கங்களுக்கு. உதாரணமாக, உங்கள் ஆர்வங்களுக்கு ஏற்ப விளம்பரங்களைப் பிரத்தியேகப்படுத்த உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்தும்போது. |
சட்டப்படியான நலநோக்கம் பெரும்பான்மையான Spotify அம்சங்களை இலவசமாக வழங்குவதற்காக Spotify சேவைக்கான நிதியுதவியைப் பெற விளம்பரங்களைப் பயன்படுத்துவதும் எங்களின் சட்டப்படியான நலநோக்கங்களில் அடங்கும். |
|
நாங்கள் இணங்கவேண்டிய சட்டப்பூர்வக் கடமைகளுடன் இணங்குவதற்கு. இது பின்வருமாறு இருக்கலாம்:
உதாரணமாக, வயதுச் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக உங்கள் பிறந்த தேதியை நாங்கள் பயன்படுத்தும்போது. |
சட்டப்பூர்வக் கடமைகளுடன் இணங்குதல் |
|
சட்ட அமலாக்க அமைப்பு, நீதிமன்றங்கள் அல்லது பிற சம்பந்தப்பட்ட ஆணையங்களின் கோரிக்கைக்கு இணங்குவதற்கு. |
சட்டப்பூர்வக் கடமைகளுடன் இணங்குதல் மற்றும் சட்டப்படியான நலநோக்கம் கடுமையான குற்றத்தைத் தடுக்க அல்லது கண்டறிய சட்ட அமலாக்க ஆணையங்களுக்கு உதவுவதும் எங்களின் சட்டப்படியான நலநோக்கங்களில் அடங்கும். |
|
மூன்றாம் தரப்பினருடனான ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு. உதாரணமாக, Spotify உரிமைதாரருடன் தரவைப் பகிர்வதற்கு நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பயனர்களின் கேட்டல் செயல்பாடு தொடர்பான அடையாளம் நீக்கப்பட்ட தரவை நாங்கள் வழங்கும்போது. |
சட்டப்படியான நலநோக்கம் எங்களின் சட்டப்படியான நலநோக்கங்களில் இவை அடங்கும்:
|
|
அறிவுசார் உடைமை மீறல் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கம் தொடர்பான புகார்கள் மீது தக்க நடவடிக்கையை எடுப்பதற்கு. |
சட்டப்படியான நலநோக்கம் அறிவுசார் உடைமை மற்றும் அசல் உள்ளடக்கத்தைப் பாதுகாப்பதும் எங்களின் சட்டப்படியான நலநோக்கங்களில் அடங்கும். |
|
சட்ட உரிமைகோரல்களை உருவாக்குவதற்கு, பயன்படுத்துவதற்கு அல்லது நியாயப்படுத்துவதற்கு. உதாரணமாக, ஏதேனும் வழக்கு விசாரணைக்கு நாங்கள் உள்ளாகி, அந்த வழக்கு தொடர்பாக எங்கள் வழக்கறிஞர்களுக்கு தகவல்களை வழங்க வேண்டியபோது. |
சட்டப்படியான நலநோக்கம் எங்களின் சட்டப்படியான நலநோக்கங்களில் இவை அடங்கும்:
|
|
வணிகத் திட்டமிடல், அறிக்கையிடல், முன்கணிப்பு ஆகியவற்றுக்கு. உதாரணமாக, எங்கள் தயாரிப்புகள் மற்றும் அம்சங்களைப் புதிய இடங்களில் வெளியிடத் திட்டமிடுவதற்காக, ஒருங்கிணைக்கப்பட்ட பயனர் தரவை (எ.கா. ஒரு நாட்டில் புதிதாகப் பதிவுசெய்தவர்களின் எண்ணிக்கை) நாங்கள் பார்க்கும்போது. |
சட்டப்படியான நலநோக்கம் எங்கள் வணிகத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துவதற்காக ஆய்வுகள் மேற்கொள்வதும், திட்டமிடுவதும் எங்களின் சட்டப்படியான நலநோக்கங்களில் அடங்கும். |
|
உங்கள் பேமெண்ட்டைச் செயல்படுத்துவதற்கு. உதாரணமாக, Spotify சந்தாவை வாங்க உங்களை அனுமதிப்பதற்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்தும்போது. |
ஒப்பந்தச் செயல்பாடு மற்றும் ஒப்புதல் |
|
Spotify சேவையைப் பாதுகாப்பானதாக வைத்திருப்பதற்கு மற்றும் மோசடியைக் கண்டறிந்து தடுப்பதற்கு. உதாரணமாக, Spotify சேவை மோசடியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க பயன்பாட்டுத் தரவை நாங்கள் பகுப்பாய்வு செய்யும்போது. |
சட்டப்படியான நலநோக்கம் மோசடி மற்றும் சட்டத்திற்குப் புறம்பான பிற செயல்பாடுகளில் இருந்து Spotify சேவை மற்றும் எங்கள் பயனர்களைப் பாதுகாப்பதும் எங்களின் சட்டப்படியான நலநோக்கங்களில் அடங்கும். |
|
ஆய்வு மற்றும் கருத்துக்கணிப்புகள் நடத்துவதற்கு. உதாரணமாக, கருத்து கேட்பதற்காகப் பயனர்களை நாங்கள் தொடர்புகொள்ளும்போது. |
சட்டப்படியான நலநோக்கம் Spotify சேவை குறித்து பயனர்கள் என்ன நினைக்கிறார்கள், அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நன்குப் புரிந்துகொள்வதும் எங்களின் சட்டப்படியான நலநோக்கங்களில் அடங்கும். |
|
சட்டப்படியான நலநோக்கம் சட்ட அடிப்படையாக அங்கீகரிக்கப்படாத அதிகார எல்லைகளில், நாங்கள் ஒப்பந்தம் அல்லது ஒப்புதலைச் சார்ந்திருக்கிறோம்.
5. உங்கள் தனிப்பட்ட தரவைப் பகிர்தல்
நீங்கள் Spotify சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் சேகரிக்கப்படும் அல்லது உருவாக்கப்படும் தனிப்பட்ட தரவை யாரெல்லாம் பெறுவார்கள் என்பதை இந்தப் பிரிவு விவரிக்கிறது.
பொதுவில் கிடைக்கக்கூடிய தகவல்கள்
Spotify சேவையில் இந்தத் தனிப்பட்ட தரவு எப்போதும் பொதுவில் காட்டப்படும் (நீங்கள் தடைசெய்தவர்களுக்குக் காட்டப்படாது):
- உங்கள் சுயவிவரப் பெயர்
- உங்கள் சுயவிவரப் படம்
- உங்கள் பொதுப் பிளேலிஸ்ட்டுகள்
- Spotify சேவையில் நீங்கள் இடுகையிடும் பிற உள்ளடக்கம் மற்றும் தொடர்புடைய ஏதேனும் தலைப்புகள், விளக்கங்கள் மற்றும் படங்கள்
- Spotify சேவையில் நீங்கள் பின்தொடர்பவர்கள்
- Spotify சேவையில் உங்களைப் பின்தொடர்பவர்கள்
சமூக வலைதளம், மெசேஜிங் பிளாட்ஃபார்ம்கள் போன்ற மூன்றாம் தரப்புச் சேவைகளில் நீங்கள் அல்லது பிற பயனர் குறிப்பிட்ட தகவல்களைப் பகிரலாம். இதில் அடங்குபவை:
- உங்கள் சுயவிவரம்
- Spotifyயில் நீங்கள் இடுகையிடும் உள்ளடக்கமும் அது தொடர்பான விவரங்களும்
- உங்கள் பிளேலிஸ்ட்டுகள் மற்றும் தொடர்புடைய ஏதேனும் தலைப்புகள், விளக்கங்கள் மற்றும் படங்கள்
இந்தத் தகவல்களைப் பகிரும்போது, மூன்றாம் தரப்புச் சேவை அதன் அம்சங்களை ஆதரிப்பதற்காக இந்த தகவல்களைச் சேமிக்கக்கூடும்.
நீங்கள் பகிரக்கூடிய தனிப்பட்ட தரவு
இந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவற்றுடன் மட்டுமே பின்வரும் தனிப்பட்ட தரவைப் பகிர்வோம்:
- நீங்கள் பயன்படுத்துவதற்கு தேர்வுசெய்த Spotify சேவை அம்சம் அல்லது மூன்றாம் தரப்புச் செயலி/சேவை/சாதனத்தைப் பயன்படுத்துவதற்காகத் தனிப்பட்ட தரவைப் பகிர வேண்டிய சூழல்களில் பகிர்வோம் அல்லது
- தனிப்பட்ட தரவைப் பகிர்வதற்கு நீங்கள் எங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தால் பகிர்வோம். உதாரணமாக, Spotify சேவையில் பொருத்தமான அமைப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அல்லது உங்கள் ஒப்புதலை அளிப்பதன் மூலம் நீங்கள் இதைச் செய்யலாம்
பெறுநர் வகைகள்
|
நீங்கள் பகிரக்கூடிய தரவின் வகைகள் | பகிர்வதற்கான காரணம் |
---|---|---|
உங்கள் Spotify கணக்குடன் இணைக்கும் மூன்றாம் தரப்புச் செயலிகள், சேவைகள் மற்றும் சாதனங்கள் |
|
உங்கள் Spotify கணக்கை இணைப்பதற்கு அல்லது மூன்றாம் தரப்புச் செயலிகள், சேவைகள் அல்லது சாதனங்களில் Spotify சேவையை நீங்கள் பயன்படுத்துவதற்கு. உதாரணமாக, மூன்றாம் தரப்புச் செயலிகள், சேவைகள் மற்றும் சாதனங்களில் அடங்குபவை:
உங்கள் கணக்கில் உள்ள ‘செயலிகள்’ பிரிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மூன்றாம் தரப்பு இணைப்புகளை பார்க்கலாம் அகற்றலாம். |
ஆதரவுச் சமூகம் |
|
Spotify ஆதரவுச் சமூகச் சேவையைப் பயன்படுத்த உங்களை அனுமதிப்பதற்கு. Spotify ஆதரவுச் சமூகத்தில் நீங்கள் கணக்கிற்குப் பதிவு செய்யும்போது உங்கள் சுயவிவரப் பெயரை உருவாக்குமாறு கேட்போம். Spotify ஆதரவுச் சமூகத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு இது பொதுவில் காட்டப்படும். மேலும் நீங்கள் இடுகையிடும் கேள்விகள் அல்லது கருத்துகளையும் காண்பிப்போம். |
பிற Spotify பயனர்கள் |
|
Spotify சேவையை நீங்கள் பயன்படுத்துவது பற்றிய தகவல்களைப் பிற Spotify பயனர்களுடன் பகிர்வதற்கு. Spotifyயில் உங்களைப் பின்தொடர்பவர்களும் இதில் அடங்குவர். உதாரணமாக, ‘சமூகம்’ அமைப்புகளில் நீங்கள் சமீபத்தில் பிளே செய்த கலைஞர்களையும் உங்கள் சுயவிவரத்தில் உள்ள உங்கள் பிளேலிஸ்ட்டுகளையும் பகிர்வதற்குத் தேர்வுசெய்யலாம். மேலும் நீங்கள் பிற பயனர்களுடன் இணைந்து 'பகிர்ந்த பிளேலிஸ்ட்டை' உருவாக்கலாம் அல்லது அதில் சேரலாம். பகிர்ந்த பிளேலிஸ்ட்டுகள் என்பவை உங்கள் கேட்கும் செயல்பாடுகளின் அடிப்படையில் சமூகப் பரிந்துரைகளை உங்களுக்கு வழங்கும். |
கலைஞர்கள் மற்றும் ரெக்கார்டு லேபிள்கள் |
|
கலைஞர்கள், ரெக்கார்டு லேபிள்கள் அல்லது பிற கூட்டாளர்களிடம் இருந்து செய்திகளையும் விளம்பரச் சலுகைகளையும் பெறுவதற்கு. இந்த நோக்கத்திற்காக உங்கள் பயனர் தரவை நீங்கள் பகிர்வதற்குத் தேர்வுசெய்யலாம். எப்போது வேண்டுமானாலும் உங்கள் முடிவை மாற்றிக்கொண்டு இதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். |
நாங்கள் பகிரக்கூடிய தகவல்கள்
நாங்கள் யாருடன் எதற்காகப் பகிர்கிறோம் என்பதைப் பற்றிய விவரங்களுக்குக் கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்.
பெறுநர் வகைகள்
|
தரவின் வகைகள்
|
பகிர்வதற்கான காரணம் |
---|---|---|
சேவை வழங்குநர்கள் |
|
இதன் மூலம் Spotifyக்குத் தங்கள் சேவையை அவர்கள் வழங்க முடியும். பின்வருவனவற்றுக்காக நாங்கள் பணியமர்த்தியவர்களும் சேவை வழங்குநர்களில் அடங்குவார்கள்:
|
பேமெண்ட் கூட்டாளர்கள் |
|
இதன் மூலம் உங்கள் பேமெண்ட்டுகளை அவர்கள் செயலாக்க முடியும் மற்றும் மோசடி தடுப்பு நோக்களுக்காகவும் தரவு பகிரப்படுகிறது. |
விளம்பரக் கூட்டாளர்கள் |
|
இதன் மூலம் Spotify சேவையில் மிகவும் தொடர்புடைய விளம்பரங்களை உங்களுக்கு வழங்கவும் விளம்பரங்களின் செயல்திறனை அளவிடவும் அவர்கள் எங்களுக்கு உதவ முடியும். உதாரணமாக, பிரத்தியேக விளம்பரங்களை வழங்குவதற்கு விளம்பரக் கூட்டாளர்கள் உதவுகின்றனர். |
சந்தைப்படுத்துதல் கூட்டாளர்கள் |
|
எங்கள் கூட்டாளர்களிடம் Spotifyயை விளம்பரப்படுத்துவதற்கு. இதுபோன்ற தேவைப்படும் சூழல்களில் இந்தக் கூட்டாளர்களுடன் நாங்கள் குறிப்பிட்ட சில பயனர் தரவு மற்றும் பயன்பாட்டுத் தரவை பகிர்வோம்:
கூட்டாளர்களுக்கான உதாரணங்கள்:
உங்களைப் பற்றி எங்கள் கூட்டாளர்கள் சேகரிக்கும் பிற தரவுடன் நாங்கள் வழங்கும் தனிப்பட்ட தரவையும் அவர்கள் சேர்க்கக்கூடும், எ.கா. அவர்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது. உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என நாங்கள் கருதக்கூடிய சலுகைகள், விளம்பரங்கள், பிற சந்தைப்படுத்துதல் செயல்பாடுகள் போன்றவற்றை உங்களுக்கு வழங்குவதற்காக நாங்களும் எங்கள் கூட்டாளர்களும் இந்தத் தகவல்களைப் பயன்படுத்தக்கூடும். |
ஹோஸ்டிங் பிளாட்ஃபார்ம்கள் |
|
பாட்காஸ்ட்டுகளை ஹோஸ்ட் செய்வதன் மூலம் ஹோஸ்டிங் தளங்கள் அவற்றை உங்களுக்கு வழங்குகின்றன. பாட்காஸ்ட்டை நீங்கள் பிளே செய்யும்போது ஹோஸ்டிங் தளங்களுக்கு IP முகவரி போன்ற குறிப்பிட்ட சில தரவை நாங்கள் பகிர்வோம். மேலும் Spotifyக்குச் சொந்தமில்லாத பிற ஹோஸ்டிங் தளங்களில் உள்ள பாட்காஸ்ட்டுகளை ஸ்ட்ரீம் செய்வதற்கும் உங்களை அனுமதிப்போம். எந்தத் தளம் பாட்காஸ்ட்டை ஹோஸ்ட் செய்கிறது என்பதை நிகழ்ச்சி அல்லது எப்பிசோடின் விளக்கத்தில் பாட்காஸ்ட் வழங்குநர்கள் விளக்க வேண்டும். தங்களுடன் பகிரப்படும் தரவை ஹோஸ்டிங் தளங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை அறிய அவற்றின் சொந்தத் தனிமையுரிமைக் கொள்கையைப் பாருங்கள். |
கல்வி ஆராய்ச்சியாளர்கள் |
|
புள்ளிவிவரப் பகுப்பாய்வு, கல்விசார் ஆய்வு போன்ற செயல்பாடுகளுக்கு, அடையாளம் நீக்கப்பட்ட வடிவமைப்பில் மட்டுமே தரவு வழங்கப்படும். அடையாளம் நீக்கப்பட்ட தரவு என்பது உங்கள் பெயர் அல்லது உங்களை நேரடியாக அடையாளம் காட்டும் பிற தகவல்களைக் குறியீடாக மாற்றி வழங்கும் தரவாகும். |
Spotify வாங்கும் நிறுவனங்கள் உட்பட பிற Spotify குழும நிறுவனங்கள் |
|
தினசரி வணிகச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும், அவற்றின் மூலம் Spotify சேவையையும் வாங்கப்பட்ட நிறுவனங்களின் சேவைகளையும் உங்களுக்கு வழங்குவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும். உதாரணமாக:
|
வழக்கு விசாரணையில் தொடர்புடைய சட்ட அமலாக்கத் துறை மற்றும் பிற ஆணையங்கள் அல்லது பிற தரப்பினர் |
|
நன்னம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் இவற்றைச் செய்ய வேண்டியது அவசியம் எனக் கருதும் சூழல்களில், உதாரணமாக:
|
எங்கள் வணிகத்தை வாங்குபவர்கள் |
|
வாங்குபவர் அல்லது வாங்கக்கூடிய சாத்தியம் உள்ளவருக்கு எங்கள் வணிகத்தை விற்றால் அல்லது விற்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தினால். இது போன்ற சமயத்தில், வணிகப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக உங்கள் தனிப்பட்ட தரவை வணிக வாங்குபருக்கோ இணை நிறுவனத்திற்கோ நாங்கள் பரிமாற்றக்கூடும். |
6. தரவைத் தக்கவைத்தல்
உங்களுக்கு Spotify சேவையை வழங்கவும் Spotifyயின் சட்டப்பூர்வமான அவசியமான வணிக நோக்கங்களுக்காகவும் தேவைப்படுகின்ற காலம் வரை மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் வைத்திருப்போம், இதுபோன்ற சூழல்களில்:
- Spotify சேவையின் செயல்திறனைப் பராமரித்தல்
- புதிய அம்சங்கள் மற்றும் சலுகைகள் குறித்துத் தரவின் அடிப்படையிலான வணிக முடிவுகளை எடுத்தல்
- எங்கள் சட்டப்பூர்வக் கடமைகளுடன் இணங்குதல்
- புகார்களைத் தீர்த்தல்
எங்கள் தக்கவைப்புக் காலங்களின் சில வகைகள் மற்றும் அவற்றைத் தீர்மானிப்பதற்கு நாங்கள் பயன்படுத்தும் நிபந்தனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
- நீங்கள் அகற்றும் வரை சேமிக்கப்படும் தரவு
எங்களிடமுள்ள உங்களின் குறிப்பிட்ட சில தனிப்பட்ட தரவை அகற்றக் கோருவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. கூடுதல் தகவல்கள் மற்றும் உங்கள் கோரிக்கைத் தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழல்கள் குறித்த விவரங்களுக்கு, பிரிவு 2 'உங்கள் தனிப்பட்ட தரவுக்கான உரிமைகளும் கட்டுப்பாடுகளும்' என்பதில் உள்ள 'நீக்குதல்' எனும் பிரிவைப் பாருங்கள்.
குறிப்பிட்ட சில தனிப்பட்ட தரவை Spotify சேவையில் இருந்து நீங்கள் நேரடியாக நீக்கலாம்: உதாரணமாக, உங்கள் சுயவிவரப்படத்தை மாற்றலாம் அல்லது நீக்கலாம். பயனர்கள் தனிப்பட்ட தரவைப் பார்த்து தாங்களே அதை மாற்றக்கூடிய சூழல்களில், பயனர்கள் தேர்வு செய்யும் காலம் வரை நாங்கள் அந்தத் தரவை வைத்திருப்போம் (கீழே விளக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நோக்கங்கள் பொருந்தாத பட்சத்தில்). - குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காலாவதியாகும் தரவு
குறிப்பிட்ட சில தக்கவைப்புக் காலங்களை நாங்கள் அமைத்துள்ளோம். இதனால் சில தரவு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் காலாவதியாகும். உதாரணமாக, தேடல் வினவல்களின் ஒரு பகுதியாக நீங்கள் உள்ளிடும் தனிப்பட்ட தரவு பொதுவாக 90 நாட்களுக்குப் பிறகு நீக்கப்படும். - உங்கள் Spotify கணக்கு நீக்கப்படும் வரை சேமிக்கப்படும் தரவு
உங்கள் Spotify கணக்கு நீக்கப்படும் வரை சில தரவை நாங்கள் வைத்திருப்போம். Spotify பயனர் பெயர், சுயவிவரத் தகவல்கள் ஆகியவை இதற்கான உதாரணங்களாகும். பொதுவாக ஒரு கணக்கு நீக்கப்படும் வரை ஸ்ட்ரீமிங் வரலாற்றை நாங்கள் வைத்திருப்போம். உதாரணமாக, பயனர்கள் கேட்டு மகிழும் நினைவுகளைத் தூண்டும் பிளேலிஸ்ட்டுகள், கேட்கும் செயல்பாடுகளின் அடிப்படையில் வழங்கப்படும் பிரத்தியேகப் பரிந்துரைகள் ஆகியவற்றை வழங்குவதற்காக (எ.கா., உங்கள் வரலாற்றுத் தேக்ககம், உங்கள் சம்மர் ரீவைண்டு). உங்கள் Spotify கணக்கு நீக்கப்படும்போது இந்த வகையான தரவு நீக்கப்படும் அல்லது அடையாளம் நீக்கப்படும். - குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நீண்ட காலத்திற்குத் தக்கவைக்கப்படும் தரவு
உங்கள் கணக்கு நீக்கப்பட்ட பிறகு குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டும் சில தரவை நாங்கள் நீண்ட காலத்திற்குத் தக்கவைப்போம். உதாரணமாக, தரவைத் தக்கவைப்பதற்கான சட்டப்பூர்வ அல்லது ஒப்பந்தக் கடமைகளுக்கு நாங்கள் உட்பட்டிருத்தல். கட்டாயத் தரவுத் தக்கவைப்புச் சட்டங்கள், விசாரணையுடன் தொடர்புடைய தரவைத் தக்கவைப்பதற்கான அரசு உத்தரவுகள், சட்ட நடவடிக்கை நோக்கங்களுக்காகத் தக்கவைக்கப்படும் தரவு போன்றவையும் இதில் அடங்கும். Spotify சேவையில் இருந்து அகற்றப்பட்ட தரவையும் குறிப்பிட்ட காலத்திற்கு நாங்கள் தக்கவைக்கக்கூடும். பின்வருபவற்றுக்காக இதை நாங்கள் செய்கிறோம்:- பயனர் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவுவதற்கு அல்லது
- தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தில் இருந்து எங்கள் தளத்தைப் பாதுகாப்பதற்கு.
எங்கள் பயனர் வழிகாட்டுதல்கள் மற்றும் தளத்தின் விதிகள் மீறப்படக்கூடிய சூழல்களில் அது குறித்து விசாரிக்க இது எங்களுக்கு உதவும். சட்டப்படி தேவைப்படும் பட்சத்தில் சட்டத்திற்குப் புறம்பான உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றுவோம்.
7. பிற நாடுகளுக்குத் தரவைப் பரிமாற்றுதல்
நாங்கள் உலகளவில் வணிகத்தை மேற்கொள்வதால், Spotify சேவையை உங்களுக்கு வழங்குவதற்காகத் தனிபட்ட தரவை Spotify சர்வதேச அளவில் அதன் துணை நிறுவனங்கள், துணை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் பகிர்கிறது. ஐரோப்பிய ஒன்றியச் சட்டங்கள் அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொருந்தக்கூடிய சட்டங்களைப் போல் வலுவான தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டிராத நாடுகளிலும் அவர்கள் உங்கள் தரவைச் செயலாக்கக்கூடும். உதாரணமாக, உங்கள் தரவின் மீதான உங்களின் உரிமைகள் மாறுபடலாம்.
சர்வதேச அளவில் தனிபட்ட தரவை நாங்கள் பரிமாற்றும்போது, இவற்றுக்காக நாங்கள் கருவிகளைப் பயன்படுத்துவோம்:
- பொருந்தக்கூடிய சட்டத்துடன் தரவுப் பரிமாற்றம் இணங்கியிருப்பதை உறுதிசெய்தல்
- ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அதே பாதுகாப்பு நிலையை உங்கள் தரவுக்கும் வழங்க உதவுதல்
பொருந்தக்கூடிய ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்துடன் ஒவ்வொரு தரவுப் பரிமாற்றமும் இணங்கியுள்ளதா என்பதை உறுதிசெய்ய பின்வரும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம்:
- வழக்கமான ஒப்பந்தக் கூறுகள் (SCCகள்'). இந்தக் கூறுகளின்படி, பிற தரப்பு உங்கள் தரவைப் பாதுகாப்பதுடன், ஐரோப்பிய ஒன்றிய அளவிலான உரிமைகளையும் பாதுகாப்பையும் உங்களுக்கு வழங்க வேண்டும். உதாரணமாக, பிரிவு 3 'நாங்கள் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தரவு' என்பதில் விளக்கியுள்ள தனிப்பட்ட தரவை அமெரிக்காவில் உள்ள சேவையகத்தைப் பயன்படுத்தக்கூடிய எங்கள் ஹோஸ்டிங் வழங்குநருக்குப் பரிமாற்ற நாங்கள் SCCs-ஐப் பயன்படுத்துகிறோம். நீங்கள் எங்களை அல்லது உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குகின்ற மூன்றாம் தரப்பைத் தொடர்புகொள்வதன் மூலம் வழக்கமான ஒப்பந்தக் கூறுகளின் கீழ் உங்களுக்கு உள்ள உரிமைகளைப் பயன்படுத்தலாம்.
- அவசியத் தீர்மானங்கள். தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க ஐரோப்பிய கமிஷனால் தீர்மானிக்கப்பட்ட அவசியச் சட்டங்களைக் கொண்ட ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு வெளியே உள்ள நாடுகளுக்கு நாங்கள் தனிப்பட்ட தரவைப் பரிமாற்றுவோம் என்பதே இதன் அர்த்தமாகும். உதாரணமாக, பிரிவு 3 'நாங்கள் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தரவு' என்பதில் விளக்கியுள்ள தனிப்பட்ட தரவை யுனைடெட் கிங்டம், கனடா, ஜப்பான், கொரியக் குடியரசு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள விற்பனையாளர்களுக்குப் பரிமாற்றுவோம்.
மேலும் நாங்கள் ஒவ்வொரு தரவுப் பரிமாற்றத்திற்கும் பொருந்தும் கூடுதலான பாதுகாப்புகளையும் கண்டறிந்து பயன்படுத்துகிறோம். உதாரணமாக, நாங்கள் இவற்றைப் பயன்படுத்துகிறோம்:
- என்க்ரிப்ஷன், அடையாளம் நீக்கிச் செயலாக்குதல் போன்ற தொழில்நுட்பரீதியான பாதுகாப்புகள்
- அரசு அதிகாரியின் பொருத்தமற்ற அல்லது சட்ட விரோதமான கோரிக்கைகளை எதிர்கொள்வதற்கான கொள்கைகள் மற்றும் செயல்முறைகள்
8. உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்
எங்கள் பயனர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க உதவும் வகையில் பொருத்தமான தொழில்நுட்ப மற்றும் நிறுவன அளவிலான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளோம். இருப்பினும், எந்த அமைப்பும் எப்போதும் முழுமையான பாதுகாப்பை வழங்காது என்பதை நினைவில்கொள்ளவும்.
அங்கீகரிக்கப்படாத அணுகல், எங்கள் சிஸ்டங்களில் தனிப்பட்ட தரவைத் தேவையின்றித் தக்கவைத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்குப் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயல்படுத்தியுள்ளோம். இதில் அடையாளம் நீக்குதல், என்க்ரிப்ஷன், அணுகல் மற்றும் தக்கவைத்தல் தொடர்பான கொள்கைகள் அடங்கும்.
உங்கள் பயனர் கணக்கை பாதுகாக்க, நாங்கள் பரிந்துரைப்பவை:
- Spotify கணக்கிற்கு நீங்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்
- யாரிடமும் உங்கள் கடவுச்சொல்லைப் பகிர வேண்டாம்
- உங்கள் கணினி மற்றும் உலாவிக்கான அணுகலைக் கட்டுப்படுத்தவும்
- பகிரப்பட்ட சாதனங்களில் Spotify சேவையைப் பயன்படுத்தி முடித்தவுடன் அதிலிருந்து வெளியேறிவிடவும்
- உங்கள் கணக்கைப் பாதுகாத்தல் என்பதில் இது குறித்த கூடுதல் தகவல்களைப் படிக்கவும்
உங்கள் கணக்குப் பக்கத்தில் உள்ள 'அனைத்திலும் இருந்து வெளியேறு' செயல்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் Spotifyயை உபயோகிக்கும் பல்வேறு சாதனங்களில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேறலாம்.
உங்கள் Spotify கணக்கிற்கான அணுகலைக் கொண்டுள்ள பிறரால் உங்கள் கணக்கில் உள்ள தனிப்பட்ட தரவு, கட்டுப்பாடுகள், Spotify சேவை ஆகியவற்றை அணுக முடியும். உதாரணமாக, பகிரப்பட்ட சாதனத்தில் உங்கள் கணக்கைப் பயன்படுத்த பிறரை நீங்கள் அனுமதித்திருக்கக்கூடும்.
இந்தத் தனிப்பட்ட தரவைப் பகிர்வதற்குச் சரியானவர்கள் என நீங்கள் கருதுபவர்களை மட்டும் உங்கள் கணக்கைப் பயன்படுத்த அனுமதிப்பது உங்கள் பொறுப்பாகும். பிறர் உங்கள் Spotify கணக்கைப் பயன்படுத்துவது உங்கள் தனிப்பட்ட பரிந்துரைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் மற்றும் அவர்களின் பயன்பாடு நீங்கள் பதிவிறக்கும் தரவிலும் சேர்க்கப்படும்.
9. சிறார்கள்
கவனத்திற்கு: Spotify Kidsஸுக்கான தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்படாத வரை இந்தக் கொள்கை Spotify Kidsஸுக்குப் பொருந்தாது. Spotify Kids என்பது ஒரு தனிப்பட்ட Spotify செயலியாகும்.
ஒவ்வொரு நாட்டிலும் அல்லது பிராந்தியத்திலும் Spotify சேவை குறைந்தபட்ச 'வயது வரம்பை' நிர்ணயித்துள்ளது. பின்வரும் வயதுடைய சிறார்களுக்கு Spotify சேவை வழங்கப்படாது:
- 13 வயதிற்கு உட்பட்டவர்கள் அல்லது
- சட்டப்படி தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கான வயதை அடையாத சிறார்கள் அல்லது
- தங்களின் தனிப்பட்ட தரவைச் செயலாக்க பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும் சிறார்கள்
பொருந்தக்கூடிய வயது வரம்பிற்கு உட்படாத சிறார்கள் எனத் தெரிந்தே அவர்களின் தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரித்துப் பயன்படுத்தமாட்டோம். நீங்கள் வயது வரம்பிற்கு உட்படவில்லை எனில், Spotify சேவையைப் பயன்படுத்த வேண்டாமெனவும் எங்களிடம் எந்தத் தனிப்பட்ட தரவையும் வழங்க வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறோம். இதற்குப் பதிலாக Spotify Kids கணக்கைப் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறோம்.
நீங்கள் வயது வரம்பிற்கு உட்படாத சிறாரின் பெற்றோராக இருந்து அவர்கள் Spotifyயில் தங்களின் தனிப்பட்ட தரவை வழங்கியுள்ளனர் என்பதை அறிந்தால் எங்களைத் தொடர்புகொள்ளவும்.
பொருந்தக்கூடிய வயது வரம்பிற்கு உட்படாத சிறாரின் தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரித்திருப்பதை அறிந்தால், அவற்றை நீக்குவதற்கான தக்க நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். இதனால் நாங்கள் அந்தச் சிறாரின் Spotify கணக்கை நீக்க வேண்டியிருக்கும்.
முதன்மையான Spotify சேவையைப் பகிரப்பட்ட சாதனத்தில் பயன்படுத்தும்போது, 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்குப் பொருத்தமற்றதாக இருக்கக்கூடிய எந்தவொரு உள்ளடக்கத்தையும் பிளே செய்வது அல்லது பரிந்துரைப்பது குறித்துக் கவனத்துடன் இருங்கள்.
10. இந்தக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
நாங்கள் இந்தக் கொள்கையில் அவ்வப்போது மாற்றங்களைச் செய்யக்கூடும்.
இந்தக் கொள்கையில் நாங்கள் மாற்றங்களைச் செய்யும்போது, அந்தச் சூழலுக்குத் தகுந்த தெளிவான அறிவிப்பை உங்களுக்கு வழங்குவோம். உதாரணமாக, Spotify சேவையில் தெளிவான அறிவிப்பைக் காட்டக்கூடும் அல்லது மின்னஞ்சல்/சாதன அறிவிப்பை உங்களுக்கு அனுப்பக்கூடும்.
11. எங்களைத் தொடர்புகொள்வது எப்படி?
இந்தக் கொள்கையைப் பற்றி ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துகள் இருந்தால், எங்கள் தரவுப் பாதுகாப்பு அலுவலரைப் பின்வரும் ஏதேனும் வழிகளில் தொடர்புகொள்ளவும்:
- privacy@spotify.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்
- Spotify AB, Regeringsgatan 19, 111 53 Stockholm, Sweden என்ற முகவரிக்குக் கடிதம் அனுப்பவும்
Spotify AB என்பது இந்தக் கொள்கையின் கீழ் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கான தரவுக் கட்டுப்படுத்தி ஆகும்.
© Spotify AB