படைப்பாற்றல் மிக்க லட்சக்கணக்கான கலைஞர்களுக்குத் தங்களின் கலை மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலமும், கோடிக்கணக்கான ரசிகர்கள் அந்தக் கலையை ரசித்து அதன் மூலம் ஊக்கம் பெறுவதற்குமான வாய்ப்பை வழங்குவதன் மூலமும் – மனிதப் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதே Spotifyயின் நோக்கமாகும். பல்வேறு வகையான கலை வெளிப்பாடு, யோசனைகள், கண்ணோட்டங்கள், குரல்கள் ஆகியவற்றுக்கு வாய்ப்பளிப்பதன் மூலமாகவே இந்த நோக்கத்தை எங்கள் தளத்தில் அடைய முடியும் என நம்புகிறோம். அதாவது எங்கள் தளத்தில் உள்ள சில உள்ளடக்கங்கள் சிலருக்குப் பிடித்தமானதாக இல்லாமலும், Spotify ஆதரிக்கக் கூடியவையாக இல்லாமலும் இருக்கலாம் என்பதே இதன் அர்த்தமாகும்.
எனினும், எந்தவித உள்ளடக்கமாக இருந்தாலும் எங்கள் தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என அர்த்தமல்ல. எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதை நிர்வகிப்பது தொடர்பாக நீங்கள் ஏற்றுக்கொண்ட விதிமுறைகளுடன் கூடுதலாக, அனைவரும் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த விதிகள் உதவுகின்றன.
நீங்கள் ஓர் இசைக்கலைஞர், பாட்காஸ்டர் அல்லது பிற பங்களிப்பாளராக இருந்தால், எங்கள் தளத்தில் எவையெல்லாம் அனுமதிக்கப்படாது என்பது குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். கீழுள்ள பிரிவுகளில் உள்ள எடுத்துக்காட்டுகள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அவை முழுமையானவை அல்ல.
Spotify என்பது மக்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிக்காட்டவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும், கேட்கவும், பகிரவும், கற்கவும் மற்றும் உத்வேகம் அடையவும் உதவும் சமூகங்களைக் கொண்ட ஓர் இடமாகும். வன்முறையை ஊக்குவிக்காதீர்கள், வெறுப்பைத் தூண்டாதீர்கள், உபத்திரவம் அளிக்காதீர்கள், துன்புறுத்தாதீர்கள் அல்லது உடல் ரீதியாகத் தீவிரப் பாதிப்பையோ மரணத்தையோ ஏற்படுத்தக்கூடிய வகையிலான பிற நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள். தவிர்க்க வேண்டியவை:
தனிநபருக்கோ குழுவிற்கோ உடல் ரீதியாகத் தீவிரப் பாதிப்பை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டுமல்ல):
தீவிரவாதத்தையோ கொடூரமான பயங்கரவாதத்தையோ பரப்பும்/ஆதரிக்கும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
ஒரு தனிநபருக்கோ அடையாளம் காணக்கூடிய குழுவிற்கோ உபத்திரவம் அளிக்கும் அல்லது தொடர்புடைய துன்புறுத்தல்களைச் செய்வதை இலக்காகக் கொண்ட உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
இனம், மதம், பாலின அடையாளம் அல்லது வெளிப்பாடு, பால், பூர்வீகம், நாடு, பாலியல் நாட்டம், ராணுவப் பணி அனுபவ நிலை, வயது, உடல்சார்ந்த இயலாமை அல்லது திட்டமிட்டுச் செய்யப்படும் பாகுபாடு/ஒதுக்குமுறையுடன் தொடர்புடைய வேறு ஏதேனும் நடத்தை போன்றவற்றின் அடிப்படையில் ஒரு நபருக்கோ குழுவிற்கோ எதிராக வன்முறை அல்லது வெறுப்பைத் தூண்டக்கூடிய உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டுமல்ல):
நிஜ வாழ்வில் தீங்கு விளைவிக்கும் அல்லது பொதுச் சுகாதாரத்திற்கு நேரடியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மிகத் தவறான அல்லது ஆபத்து நிறைந்த தவறான மருத்துவத் தகவல்களைப் பரப்பும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல)
கட்டுப்பாடு விதிக்கப்பட்ட அல்லது சட்ட விரோதமான பொருட்களின் முறைகேடான விற்பனையை விளம்பரப்படுத்தும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
சிறார் பாலியல் வன்கொடுமை அல்லது அவர்களைத் தவறாக வழிநடத்துவதை ஊக்குவிக்கும், கோரும் அல்லது வழிவகுக்கும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
Spotifyயில் சிறந்த அனுபவத்தை உருவாக்க நம்பிக்கை அவசியம். அதாவது பயனர்கள் தாங்கள் யார் என கூறுகிறார்களோ அவ்வாறு இருப்பார்கள், அவர்கள் ஏமாற்றப்படமாட்டார்கள், எங்கள் தளத்தை யாரும் தவறாக வழிநடத்த முயலவில்லை என்பது போன்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது. பிறரை ஏமாற்றுவதற்காகத் தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள். தவிர்க்க வேண்டியவை:
ஏமாற்றும் நோக்கத்துடன் பிறரைப் போல் ஆள்மாறாட்டம் செய்யக்கூடிய உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
தீங்கு விளைவிக்கக்கூடிய விதமாக உண்மைக்குப் புறம்பான மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட மீடியாவை உண்மையானது எனப் பரப்பும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
தேர்தல் தொடர்பான செயல்முறைகளைக் தவறாக வழிநடத்த அல்லது அதில் குறுக்கிட முயற்சிக்கும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
Spotify சமூகத்தைத் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கக்கூடிய உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
Spotifyயில் அற்புதமான உள்ளடக்கங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இருப்பினும், எங்கள் தளத்தில் குறிப்பிட்ட சிலவற்றை நாங்கள் அனுமதிப்பதில்லை. அதிகப்படியான வன்முறை நிறைந்த/கொடூரமான உள்ளடக்கத்தையும் வெளிப்படையான பாலியல் சார்ந்த உள்ளடக்கத்தையும் இடுகையிடாதீர்கள். தவிர்க்க வேண்டியவை:
வன்முறை, கோரம், பிற அதிர்ச்சியூட்டும் படங்கள் போன்ற கொடூரமான அல்லது அவசியமற்ற சித்தரிப்புகளை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
வெளிப்படையாக பாலியல் ரீதியான விஷயங்களைக் கொண்ட உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
அனைவருக்கும் ஒரே சட்டம். நீங்கள் யாராக இருந்தாலும் பொருந்தக்கூடிய சட்டங்களுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் இணங்குவது உங்கள் பொறுப்பாகும். தவிர்க்க வேண்டியவை:
பொருந்தக்கூடிய சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் மீறும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
பிறரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
தொழில்நுட்பத்தையும் மதிப்பாய்வாளர்களையும் பயன்படுத்தி உலகம் முழுவதும் சீராகவும் குறிப்பிடத்தகுந்த அளவிலும் இந்த விதிமுறைகளை அமல்படுத்த Spotify முயற்சிக்கிறது. பயனர் புகார்களுடன் கூடுதலாக நாங்கள் தானியங்குக் கருவிகளையும் பயன்படுத்துகிறோம். இந்தக் கருவிகள் தளத்தின் விதிகளை மீறக்கூடிய உள்ளடக்கத்தைக் கண்டறிய பல்வேறு சிக்னல்களைச் சார்ந்துள்ளன.
எங்களின் உலகளாவிய வல்லுநர் குழுக்கள் எங்கள் தளத்தின் விதிகளை உருவாக்கி, நிர்வகித்து, அமல்படுத்துகின்றனர். கொள்கைகளை மீறும் சாத்தியமான உள்ளடக்கம் குறித்துப் புகாரளிக்கப்பட்டாலோ அல்லது அது கண்டறியப்பட்டாலோ பொருத்தமான அமலாக்க நடவடிக்கையைச் செயல்படுத்துவதற்கு எங்கள் குழுக்கள் பணிபுரிவர்.
விதிமீறல் தொடர்பான முடிவுகளை நாங்கள் மிகத் தீவிரமாக எடுப்போம். மேலும் தள விதிகளின் சாத்தியமான மீறல்களை மதிப்பாய்வு செய்யும்போது சூழலைக் கருத்தில் கொள்வோம். விதிகளை மீறும் உள்ளடக்கம் Spotifyயிலிருந்து அகற்றப்படக்கூடும். தொடர்ச்சியாக அல்லது கடுமையாக விதிகளை மீறினால், கணக்குகள் இடைநிறுத்தப்படக்கூடும் மற்றும்/அல்லது முடக்கப்படக்கூடும். உள்ளடக்கம் அல்லது கணக்குகளின் மீது நாங்கள் எடுக்கக்கூடிய பிற நடவடிக்கைகள் குறித்து இங்கே மேலும் அறிக.
Spotify அனைவருக்கும் வெளிப்படையான பாதுகாப்பான தளமாக இருப்பதை உறுதிசெய்ய இந்தத் தளத்தின் விதிகள் உதவுகின்றன. தேவையைப் பொறுத்து நாங்கள் இந்தத் தகவல்களைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து புதுப்பிப்பதால் அடிக்கடி இங்கே வந்து பாருங்கள். நீங்கள் பயன்படுத்தும் Spotify தயாரிப்புகளையும் அம்சங்களையும் பொறுத்து, கூடுதல் தேவைகளையும் நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கலாம்.
Spotifyயில் உள்ளடக்கத்தில் ஏதேனும் சிக்கலைக் கண்டறிந்தீர்களா? கண்டறிந்துள்ளீர்கள் எனில், இங்கே புகாரளிப்பதன் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.