Spotifyயின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்திற்கான வெளிப்படைத்தன்மை அறிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டம் (“DSA” - Digital Services Act) என்பது ஆன்லைனில் சட்டவிரோத உள்ளடக்கத்தைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் ஒழுங்குமுறையாகும்.

Spotifyயின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்திற்கான வெளிப்படைத்தன்மை அறிக்கையில் எங்கள் அணுகுமுறையின் மேலோட்டம் இடம்பெற்றிருக்கும். Spotifyயின் இடைநிலைச் சேவைகள் முழுவதிலும் உள்ள பயனர்களின் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய கொள்கைகள், நடைமுறைகள், செயல்பாடுகள் ஆகியனவும் இதிலடங்கும். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கு இந்த அறிக்கை அவசியமானது.

எங்கள் சேவைகளில் எது அனுமதிக்கப்படும், அனுமதிக்கப்படாது என்பதை Spotify தளத்தின் விதிகள் கூறுகின்றன. பயனர்களின் தரவு மற்றும் அடிப்படை உரிமைகளை நாங்கள் பாதுகாக்கும் அதேவேளையில் பயனர்கள் பதிவேற்றும் சட்டவிரோதமான, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

2024-ஆம் ஆண்டிற்கான Spotifyயின் ஆன்லைன் சேவைகள் சட்டத்திற்கான வெளிப்படைத்தன்மை அறிக்கையை இங்கே காணலாம்.

Spotifyயின் பயங்கரவாத உள்ளடக்கத்திற்கான ஆன்லைன் வெளிப்படைத்தன்மை அறிக்கை

கருத்துச் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை மதிக்கும் அதேவேளையில் டிஜிட்டல் சேவைகளைத் தீவிரவாத உள்ளடக்கத்தை விரைவாகவும் திறம்படவும் அகற்றச் செய்வதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதை ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU - European Union) பயங்கரவாத உள்ளடக்கத்திற்கான ஆன்லைன் ஒழுங்குமுறை (TCO - Terrorist Content Online Regulation) இலக்காகக் கொண்டுள்ளது.

தளத்தில் தீங்கு விளைவிக்கும் பயங்கரவாத உள்ளடக்கம் இருப்பது கண்டறியப்பட்டால் அதை அகற்ற Spotify பணியாற்றுகிறது. இந்தத் துறை அளவிலான பிரச்சனையை எதிர்த்துப் போராட நம்பகமான அதிகாரிகள் மற்றும் கூட்டாளர்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். மேலும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள எங்கள் நிறுவனத்தினுள் இருக்கும் செயல்முறைகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.

TCO-க்கு இணங்க, எங்கள் பிளாட்ஃபார்மில் பயங்கரவாத உள்ளடக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான எங்கள் முயற்சிகளை Spotifyயின் ஆன்லைனில் பயங்கரவாத உள்ளடக்கம் தொடர்பான வெளிப்படைத்தன்மை அறிக்கை விவரிக்கிறது. இந்த அறிக்கை எங்கள் அணுகுமுறை குறித்த மேலோட்டத்தை வழங்குகிறது. இதில் பயங்கரவாத உள்ளடக்கத்தைக் கண்டறிந்து தடுத்தல், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தேசிய தகுதிவாய்ந்த அதிகாரிகளிடமிருந்து நீக்குதல் உத்தரவுகளுக்குப் பதிலளித்தல் ஆகியவற்றை எவ்வாறு செய்கிறோம் என்பதும் அடங்கும்.

2024-ஆம் ஆண்டிற்கான Spotifyயின் ஆன்லைனில் பயங்கரவாத உள்ளடக்கம் தொடர்பான வெளிப்படைத்தன்மை அறிக்கையை இங்கே காணலாம்.