பாதுகாப்பு & தனியுரிமை மையம்

உள்ளடக்கச் செயல்பாடுகள்

உள்ளடக்கத்தின் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்?

தளத்தின் விதிகள், பொருந்துகிற சட்டங்கள் ஆகியவற்றை மீறும் உள்ளடக்கம் அல்லது உணர்வுப்பூர்வமான விஷயங்களைக் கொண்டுள்ள உள்ளடக்கத்தின் மீது பல்வேறு நடவடிக்கைகளை Spotify எடுக்கக்கூடும். உள்ளடக்கத்தை அகற்றுதல், உள்ளடக்கத்தின் கண்டறியத்தக்க நிலையைக் கட்டுப்படுத்துதல், உள்ளடக்கத்தின் மூலம் வருமானம் ஈட்டுவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும்/அல்லது உள்ளடக்கம் குறித்த அறிவுரை லேபிள்களைச் சேர்த்தல் போன்றவை இதிலடங்கும்.

என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பது குறித்து முடிவுசெய்யும்போது பல்வேறு காரணிகளை நாங்கள் கருத்தில் கொள்வோம். எங்கள் மதிப்பாய்வுச் செயல்முறையின் ஓர் அங்கமாகக் குறிப்பிட்ட விஷயம் அல்லது தற்போதைய நிகழ்வின் சூழல் விவரம், கண்டறியப்பட்ட விதிமீறல்களின் தீவிரத்தன்மை மற்றும்/அல்லது அவற்றுக்கு இடையேயான கால இடைவெளி போன்றவை இந்தக் காரணிகளில் அடங்கும். நடவடிக்கை தேவைப்படும் உள்ளடக்கத்தைக் கண்டறிய பல்வேறு அல்காரிதங்களையும் மனிதர்களைக் கொண்டு கண்டறியும் முறைகளையும் (பயனர் புகார்கள் உட்பட) பயன்படுத்துகிறோம். ஒரே உள்ளடக்கத்தையோ பயனரையோ இலக்காகக் கொண்டு புகாரளித்தல் உட்பட எங்கள் செயல்முறைகளைத் தவறாகப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான உங்களின் திறன் கட்டுப்படுத்தப்படக்கூடும்.

உள்ளடக்கத்தை அகற்றுதல்

உள்ளடக்கம் எங்கள் தளத்தின் விதிகளை மீறினால், அது Spotifyயில் இருந்து நீக்கப்படக்கூடும்.

கணக்கை அகற்றுதல்

தளத்தின் விதிகளைத் தொடர்ச்சியாக மற்றும்/அல்லது கடுமையாக மீறினால் கணக்கு இடைநிறுத்தப்படக்கூடும் மற்றும்/அல்லது முடக்கப்படக்கூடும். படைப்பாளர் வைத்திருக்கக்கூடிய அனைத்து தொடர்புடைய மற்றும் இணைக்கப்பட்ட Spotify கணக்குகளும் இதில் அடங்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

உள்ளடக்கத்தின் கண்டறியத்தக்க நிலையைக் கட்டுப்படுத்துதல்

உள்ளடக்கம் விதிமீறலுக்கு மிக நெருக்கமாக வந்து, ஆனால் அவற்றை அகற்றும் அளவிற்குத் தளத்தின் விதிகளை மீறாமல் இருக்கும் நேரங்களில் அவை பயனர்களைச் சென்றடைவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கக்கூடும். அந்த உள்ளடக்கம் Spotifyயில் தொடர்ந்து இருந்தாலும் அது:

  • தளத்தில் விளம்பரப்படுத்துவதற்குத் தகுதிபெறாமல் போகக்கூடும்;
  • பரிந்துரைகளில் காட்டப்படுவது குறைக்கப்படக்கூடும்;
  • தேடல் முடிவுகளில் அதன் தரவரிசை குறைக்கப்படலாம்; மற்றும்/அல்லது
  • சில Spotify தயாரிப்புகளின் அம்சங்களிலிருந்து விலக்கப்படக்கூடும்.

அதிக அபாயம் உள்ள காலகட்டங்களில் தீங்கிழைக்கும் உள்ளடக்கம் ஆன்லைனில் பரவக்கூடிய ஆபத்து பெரும்பாலும் அதிகமாகவே இருக்கும். உதாரணமாக, தேர்தல்கள், வன்முறை மோதல்கள், அதிக உயிர்ச் சேதங்கள் ஏற்படும் நிகழ்வுகள். இதைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது குறிப்பிட்ட வகையான உள்ளடக்கம் பயனர்களைச் சென்றடைவதைக் கட்டுப்படுத்துதல், சமகால மற்றும் நம்பகமான தகவல் மூலங்களை ஹைலைட் செய்தல் போன்ற கூடுதல் நடவடிக்கைகளை Spotify எடுக்கக்கூடும்.

உள்ளடக்கம் மூலம் Spotifyயில் வருமானம் ஈட்டுவதைக் கட்டுப்படுத்துதல்

Spotifyயில் வருமானம் ஈட்டுவதற்கு அனைத்து உள்ளடக்கங்களும் தகுதிபெறுவது இல்லை. நீங்கள் வருமானம் ஈட்ட விரும்பும் உள்ளடக்கம் தளத்தின் விதிகளுடன் கூடுதலாக எங்களின் வருமானம் ஈட்டுதல் தொடர்பான கொள்கைகளைப் பூர்த்தி செய்கின்றனவா என்றும் மதிப்பாய்வு செய்யப்படும்.

உள்ளடக்கம் குறித்த அறிவுறுத்தலைச் சேர்த்தல்

குறிப்பிட்ட விஷயம் தொடர்பாகக் கூடுதல் சூழல் விவரங்கள் தேவைப்படும் சமயங்களில், தொடர்புடைய தகவல்களைச் சேர்ப்பதற்கான மற்றும்/அல்லது சமகால, நம்பகமான தகவல் மூலங்களுடன் பயனர்களை இணைப்பதற்கான உள்ளடக்கம் குறித்த அறிவுரை லேபிள் சேர்க்கப்படக்கூடும்.

குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்தில் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துதல்

Spotify ஓர் உலகளாவிய சமூகமாகும். நாங்கள் செயல்படும் நாடுகளின் சட்டங்களை மதிக்கிறோம். பொருந்துகிற சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் பயனர்கள் இணங்க வேண்டும். எங்கள் தளத்தின் விதிகளை மீறாத உள்ளடக்கம் உள்ளூர் சட்டங்களை மீறுவதாகக் கண்டறியப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட நாடுகளில் அல்லது பிராந்தியங்களில் கட்டுப்படுத்தப்படக்கூடும்.

மறுபரிசீலனைக் கோரிக்கைகள்

மறுபரிசீலனை செய்யக் கோரும் வசதியையும் அதற்கான விருப்பத்தேர்வுகளையும் நாங்கள் தொடர்ந்து விரிவாக்குவோம். இவை இடத்தைப் பொறுத்து மாறுபடும்.

நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிப்பவராக இருந்து, உங்கள் உள்ளடக்கத்தின் மீதோ உங்களின் புகார் தொடர்பாகவோ எடுக்கப்பட்டுள்ள அமலாக்க நடவடிக்கையை நீங்கள் ஏற்கவில்லை எனில், அடுத்த படிகள் குறித்து Spotify உங்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.