பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒன்றாக உள்ளடக்கத்தைத் உலாவவும், கல்வி தொடர்பான உள்ளடக்கத்தைக் கண்டறியவும், இசையைக் கேட்கவும் தனித்துவமான வாய்ப்பை Spotify போன்ற தளங்கள் வழங்குகின்றன. உங்களில் சிலர் உங்கள் பிள்ளைகளைத் தூங்க வைப்பதற்கான தாலாட்டுப் பிளேலிஸ்ட்டுகளின் மூலம் பலனடைந்திருப்பீர்கள். இன்னும் பலர் உங்கள் பிள்ளைகளின் வயதில் நீங்கள் இருக்கும்போது கேட்டு ரசித்த குறிப்பிட்ட பாடலைப் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி மகிழ்ந்திருப்பீர்கள். சமீபத்திய ஆண்டுகளில் பிள்ளைகள் பயன்படுத்தக்கூடிய ஆன்லைன் தளங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகியுள்ளது. பிள்ளைகள் இவற்றைப் பயன்படுத்தும்போது அவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்பதை அறிந்துகொள்வது மிகவும் சவாலான விஷயமாக இருக்கலாம்.
என் பெயர் அலெக்ஸ் ஹோம்ஸ். நான் Spotify உட்பட பல்வேறு சமூக வலைதள நிறுவனங்களின் உலகளாவிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக உள்ளேன். பாதுகாப்பு மற்றும் ஆன்லைன் தீங்குகள் தொடர்பான அவர்களின் அணுகுமுறைகள் தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். நான் The Diana Award என்கிற லாப நோக்கற்ற நிறுவனத்தின் துணைத் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணிபுரிகிறேன். இது ‘இளைஞர்களுக்கு உலகை மாற்றும் சக்தி உண்டு’ என்கிற இளவரசி டயானவின் நம்பிக்கையின் அடிப்படையிலான முயற்சியாகும். எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட துன்புறுத்தலைத் தொடர்ந்து எனது 16வது வயதில் Anti-Bullying Ambassadors என்கிற ஒருவருக்கு ஒருவர் ஆதரவளிக்கும் திட்டத்தை நிறுவினேன். நீங்கள் நினைப்பதுபோல், சிறுவர்களின் மகிழ்ச்சிக்குத் தடையாக இருக்கும் எந்தவொரு விஷயத்துக்கும் தீர்வுகாண்பதில் நான் ஆர்வமாக உள்ளேன்.
ஆன்லைன் உலகில் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பெற்றோர்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதை நான் எப்போதும் பரிந்துரைக்கிறேன். அவர்கள் எந்த வகையான உள்ளடக்கத்தைக் கேட்பதில் உங்களுக்குப் பிரச்சனை இல்லை என்பதைப் பற்றி உரையாடுங்கள். மேலும் உள்ளடக்கம் அவர்களுக்கு வருத்தத்தையோ கவலையையோ ஏற்படுத்தினால் அவர்கள் என்ன செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள். பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, பிள்ளைகளுக்காக Spotify வடிவமைத்துள்ள சமீபத்திய கருவிகள் மற்றும் அம்சங்களை விளக்கும் ஒரு வழிகாட்டியை Spotify கீழே கொடுத்துள்ளது. வெளிப்படையான உள்ளடக்கத்திலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய பெற்றோர் கட்டுப்பாடுகள், எந்தவொரு தேவையற்ற உள்ளடக்கம் அல்லது கவன ஈர்ப்பு தொடர்பாக நீங்கள் புகாரளிக்கக்கூடிய வழிகள் ஆகியவை இதிலடங்கும்.
உங்கள் பிள்ளை பயன்படுத்தக்கூடிய அனைத்து வெவ்வேறு தளங்களையும் பற்றிப் புரிந்துகொண்டு அவற்றைக் கண்காணிப்பது கடினமானதாகும். எனவே Spotifyயையும், பிள்ளை கேட்கும் இசையின் வகைகளையும், அவர் பிறருடன் தொடர்புகொள்ளும் வழிகளையும் புரிந்து கொள்வதற்கு ஒவ்வொரு பெற்றோரும்/பாதுகாவலரும் உங்கள் பிள்ளையுடன் இணைந்து பணியாற்றுமாறு பரிந்துரைக்கிறேன். பிள்ளையின் செயல்பாடு பிற குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து அவர் யோசிப்பதற்கும், பிளேலிஸ்ட் தலைப்புகள், சுயவிவரங்கள், பிளேலிஸ்ட் படங்கள்/பதிவேற்றங்கள் ஆகியவை குறித்து அவர் கவனமுடன் இருப்பதற்கும் இது உதவிகரமாக இருக்கக்கூடும். அவரின் பிளேலிஸ்ட்டுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஊக்குவியுங்கள். இது அவர்களுடன் சேர்ந்து தேர்வு செய்யவும், இணைந்திருக்கவும், ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையலாம்.
பிள்ளைகள் தங்களை வெளிப்படுத்தவும் உலகத்தைப் புரிந்து கொள்ளவும் எப்படிக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதில் இசையும் ஆடியோவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சரியான உதவியுடன், உங்கள் பிள்ளைகளின் தனியுரிமை, சுதந்திரம், உங்களின் தனிப்பட்ட வளர்ப்புப் பாணி ஆகியவற்றைச் சமநிலையுடன் கையாளும் அதேவேளையில் Spotify போன்ற கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளை அதிகத் தன்னம்பிக்கை, வலிமை மற்றும் ஆர்வம் உடையவராக மாற உதவலாம். முக்கியமாக, டிஜிட்டல் உலகத்தைப் பற்றி உங்கள் பிள்ளை கற்கும்போது அவருக்கு உதவ நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்த, இந்த விஷயங்கள் குறித்து அவருடன் நீங்கள் பேசுவது சிறந்த வழியாகும்.
அலெக்ஸ் ஹோம்ஸ்
சிறார் பாதுகாப்பு நிபுணர்
Spotify என்பது டிஜிட்டல் இசை, பாட்காஸ்ட் மற்றும் ஆடியோபுக் சேவையாகும். இது உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்களின் லட்சக்கணக்கான பாடல்கள் மற்றும் பிற உள்ளடக்கத்துக்கான அணுகலை வழங்குகிறது. டிஜிட்டல் உலகத்தில் பயணிப்பது பெற்றோருக்குச் சவாலான ஒன்றாக இருக்கலாம் என்பதையும் உங்கள் குடும்பத்திற்கு எந்த உள்ளடக்கம் மற்றும் அனுபவங்கள் சரியானதாக இருக்கும் என்பது பெரும்பாலும் தனிப்பட்ட முடிவாகும் என்பதையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தை உருவாக்க உதவுவதற்குச் சில முக்கியமான நடவடிக்கைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இவை உட்பட:
பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பான சூழல் மாறிக்கொண்டே இருப்பதால், எங்களின் கொள்கைகள், கருவிகள், திறன்கள் ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருப்போம். இடைப்பட்ட நேரத்தில், பாதுகாப்பான அனுபவத்தை உருவாக்க எங்களுக்கு உதவுவதற்குப் பெற்றோர்/பாதுகாவலராக நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து மேலும் அறிய இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கவும்.
அனைத்துப் பயனர்களும் தங்கள் கணக்குடன் தொடர்புடைய நாட்டில் தேவைப்படும் குறைந்தபட்ச வயதை எட்டியிருக்க வேண்டும். உங்கள் பிள்ளை Spotifyயைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை எட்டவில்லை எனில் அல்லது எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில் அவர்களுடைய கணக்கு மூடப்பட வேண்டும்.
கணக்கை உருவாக்கும்போது உங்கள் பிள்ளையின் வயதைத் துல்லியமாகக் குறிப்பிடுவது முக்கியமாகும். அது உள்ளூர் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தவும் வயதுக்கேற்ற தயாரிப்பு அனுபவத்தை நாங்கள் வழங்கவும் உதவுகிறது.
உங்கள் குடும்பத்திற்கு எந்த வகையான உள்ளடக்கம் மிகவும் பொருத்தமானது என்பது பற்றிய முடிவுகள் மிகவும் தனிப்பட்டவையாக இருக்கலாம். உங்கள் குடும்பத்திற்கேற்ற அனுபவத்தை வடிவமைக்க உதவ, பாலியல் ரீதியில் வெளிப்படையான உள்ளடக்கத்தைத் தவிர்ப்பதை அல்லது குறிப்பிட்ட கலைஞர்களின் இசையைப் பிளே செய்வதைக் கட்டுப்படுத்துவதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.
படைப்பாளர்களும் உரிமைதாரர்களும் வயது வந்தோருக்கான வார்த்தைகளையோ தீம்களையோ கொண்டுள்ள உள்ளடக்கத்தைப் பெரும்பாலும் “வெளிப்படையான உள்ளடக்கம்” என்று குறியிடுவார்கள் அல்லது அதனுடன் “E” என்ற குறிச்சொல்லைச் சேர்ப்பார்கள். வெளிப்படையானது என்று குறிக்கப்பட்ட உள்ளடக்கத்தைத் தவிர்க்க, இங்கே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
மேம்பட்ட உதவிக்குறிப்பு: பகிரப்பட்ட சாதனத்தில் இருந்தோ அருகில் பிள்ளை இருக்கும்போதோ (உதாரணமாக, குடும்பச் சுற்றுலா, பிறந்தநாள் கொண்டாட்டம்) நீங்கள் இசையைப் பிளே செய்கிறீர்கள் எனில், வெளிப்படையான உள்ளடக்க வடிப்பானை இயக்குவதன் மூலம் எதிர்பாராத சங்கடமான சூழல்களைத் தவிர்க்கலாம்.
மேம்பட்ட உதவிக்குறிப்பு: சில நேரங்களில் Spotifyயில் அனைவருக்கும் ஏற்ற உள்ளடக்கம் வெளிப்படையானவை என்று குறியிடப்பட்டிருப்பதைக் காணலாம்.
பாடல், பாட்காஸ்ட் அல்லது ஆடியோபுக் தவறாகக் குறியிடப்பட்டிருந்தால், அதுகுறித்துப் புகாரளிக்க எங்களை இங்கே தொடர்புகொள்ளவும்.
ஒவ்வொரு கணக்கிலும் கலைஞர் சுயவிவரத்திற்குச் சென்று 3 புள்ளிகளைக் கிளிக் செய்து, 'இதைப் பிளே செய்யாதே' என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் மொபைல் சாதனத்திலோ உங்கள் Family திட்டத்தின் பிற உறுப்பினர்களின் மொபைல் சாதனத்திலோ குறிப்பிட்ட கலைஞர்களின் இசையைப் பிளே செய்வதைக் கட்டுப்படுத்தலாம்.
மொபைல் பயனர்கள் தங்களின் அனுபவத்தைச் சிறப்பாகக் கட்டுப்படுத்துவதற்கு, “ஆர்வமில்லை” என்ற பட்டனையும் பயன்படுத்தலாம். “ஆர்வமில்லை” என்று நீங்கள் குறித்த உள்ளடக்கம் உங்களின் துணை ஊட்டத்திலிருந்து உடனடியாக அகற்றப்படும். அது மீண்டும் காட்டப்படாது. அந்தக் கலைஞர்/பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் மற்ற பாடல்கள்/ஆல்பங்கள்/எப்பிசோடுகளும் எதிர்காலப் பரிந்துரைகளில் காட்டப்படாதவாறு வடிகட்டப்படும்.
Spotifyயில் உள்ள அனைத்து உள்ளடக்கமும் உள்ளூர் சட்டங்கள் மற்றும் எங்கள் தளத்தின் விதிகளுடன் இணங்க வேண்டும். இந்த விதிமுறைகள் எங்களின் Spotify பாதுகாப்பு ஆலோசனைக் குழு (Spotify Safety Advisory Council) உட்பட நம்பகமான உலகளாவிய பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துகளைக் கொண்டு எங்கள் நிறுவனத்திலுள்ள பாதுகாப்புக் கொள்கை நிபுணர்கள் குழுவால் உருவாக்கப்பட்டது. உள்ளடக்கம் உடனடியாக மதிப்பாய்வு செய்யப்படுவதையும் அவற்றின் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதிசெய்ய உதவ உலகெங்கிலும் 24 மணிநேரமும் பணியாற்றும் குழுக்களைப் பணியமர்த்தியுள்ளோம்.
எங்களின் கொள்கைகளும் அமலாக்க நடவடிக்கை தொடர்பான அணுகுமுறையும் நிலையானதல்ல. மாறி வரும் தவறான பயன்பாட்டின் போக்கு, உலகளாவிய ஒழுங்குமுறைச் சூழல், புதிய உள்ளடக்க வகைகள், எங்களின் நம்பகமான பாதுகாப்பு கூட்டாளர்களின் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவை மாறிக் கொண்டே இருக்கும்.
எங்கள் தளத்தின் விதிகளை மீறுவதாக நீங்கள் நம்பும் ஏதேனும் உள்ளடக்கத்தை நீங்கள் பார்த்தால், அதுகுறித்து இந்தப் படிவத்தைப் பயன்படுத்திப் புகாரளிக்கவும். புகாரளிப்பதற்கான கூடுதல் விருப்பங்கள் குறித்து மேலும் அறிய, எங்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மையத்திற்குச் செல்லவும்.
எங்கள் பயனர்களின் தனிப்பட்ட தரவை (அவர்களின் பிள்ளைகளின் தரவு உட்பட) பாதுகாப்பதிலும் பயனரின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதற்கான வழிமுறைகளை நிறுவுவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். உங்கள் மொழியில் பரிந்துரைகளை வழங்குதல், நீங்கள் விரும்பக்கூடும் என்று நாங்கள் நம்பும் பாட்காஸ்ட்டைப் பரிந்துரைத்தல், உங்களுக்குப் பிடித்தமான புதிய கலைஞரைக் கண்டறிய உங்களுக்கு உதவுதல் போன்றவற்றுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களைச் சில வழிகளில் நாங்கள் பயன்படுத்தக்கூடும்.
உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம், உங்களின் தனியுரிமைகள் மற்றும் விருப்பங்கள், உங்கள் அமைப்புகளைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து மேலும் அறிய, எங்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மையத்தைப் பாருங்கள் மற்றும் எங்களின் தனியுரிமைக் கொள்கையைப் படியுங்கள்.